டெமுஜின் கதை-4

 

4.மங்கோலியர் பின்னணி:

முன் குறிப்பு:

முழுமையாக தொடரைப் படிக்காமல் தொடர வேண்டாம்!

பொதுவாக வரலாற்றுத் தொடர்களை எழுதுவதில் உள்ள நடைமுறைச் சிக்கல் இதுதான்! ஒரு விடயத்தை சொல்ல நினைத்தால் அதன் பொருட்டு அதன் பின்னணி, வரலாற்றுக் குறிப்புகள் என பலவற்றைக் சொல்ல வேண்டிய அவசியம் அதைச் சொல்லும் எனக்கு இருக்கிறது. அது என் கடமையும் கூட!

டெமுஜின் (எ) செங்கிஸ்கானைப் பற்றி முழுதும் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் உங்களுக்கு இருக்குமேயானால் நீங்கள் மங்கோலியா, மங்கோலியர்கள், அவர்களின் கலாச்சாரம், பழக்கவழக்கம் உள்ளிட்ட  ஏராளமான தகவல்களை அறிய விருப்பம் காட்டுவதும் அவசியமாகிறது.

இவ்வளவு கதை ஏனென்றால், இப்போது நாம் மங்கோலியர்களைப் பற்றி இன்னும் கொஞ்சம் அறியப் போகிறோம். மங்கோலியர்களின் வேட்டைக்காலம்-குளிர்காலம்! நாள்கணக்கில் வேட்டையாடிவிட்டுத் திரும்புவது வாடிக்கை. வேட்டையாடுவதில் பாரபட்சமே இருக்காது. முயல், நரி, மான், காட்டுப்பன்றிகள், ஓநாய், நீர்நாய், அவ்வளவு ஏன் கண்ணில் தெரியும் பறவைகளும் மங்கோலியர் அம்பில் இரையாகும்.

இவ்வாறு பெறப்பட்ட விலங்குகளை பதப்படுத்தியும் வைப்பர் கோடைகாலத்தில். விலங்குகள் வெறுமனே இறைச்சிக்காக மட்டும் பயன்படாது. அதன் தோல்,முடி, பற்கள், கொம்புகள், எலும்புகள் எதையும் விட்டு வைக்கமாட்டார்கள். எல்லா பொருட்களுக்கும் பயன்பாடு உண்டு. அது ஆயுதமாகவோ, ஆபரணங்களாகவோ, கருவிகளாகவோ, கம்பளி(அங்கிகள்)களாகவோ உருமாறும்.

பண்டமாற்று முறையில் வாணிபங்களும் நடைபெறும். இங்குதான் சண்டைகள் தொடங்கும். அதாவது வியாபாரம் செய்யவும் வழியில்லை, வேட்டையில் விலங்குகளும் அகப்படவில்லை என்றால்   பிறக்குழுவினர்களின் கூடாரங்களைத் தாக்கி உணவு உள்பட கால்நடைகள் (முக்கியமாக குதிரைகள்! மங்கோலியர்களின் முதன்மை பலமே குதிரைகள்தான்!!) ஆகியவற்றைக் கவர்வார்கள். இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக(!) குழுவிலுள்ள அழகான பெண்களை (மட்டும்!!) கடத்திவருவார்கள்.

தோற்கும் நிலையிலுள்ள இனக்குழுவில் உள்ள ஆண்கள் பெரும்பாலும் தப்பவே எண்ணுவர்! (முதல் அத்தியாயத்திலேயே நாம் ’சிலுடு’ தப்புவதைக் கண்டோம்.) காரணம் இருக்கிறது. கொஞ்ச நாட்களில் (மாதங்களிலோ அல்லது வருடங்களிலோ. எப்படியும் ‘ரிவென்ஜ்’ உண்டு!) படைதிரட்டி மீண்டும் பழிவாங்கக் கிளம்புவர். இது மங்கோலியர்களைப் பொறுத்தவரை சாதாரணம்.

(முக்கிய குறிப்பு: இவ்வரலாறு நிகழ்ந்த காலத்தில் மங்கோலியர் என்ற இனமே இல்லை. வெவ்வேறு இனக் குழுக்களாகவே பிரிந்து வாழ்ந்து வந்தனர்.)

பொதுவாக தாக்குதல் தொடுப்பவர்கள் குழந்தைகளையும், வயதானவர்களையும் ஒன்றும் செய்ய மாட்டார்கள். தலைவனாகத் தகுதி உள்ள வாரிசுக்கு மட்டும் முடிந்தது கதை! இதுதவிர எல்லா சூறையாடல்களும் முடிந்தபின் கூடாரங்களைத் தீயிலிடும் படலமும் உண்டு.

இயல்பாகவே மங்கோலியச் சிறுவர்களுக்கு தங்கள் பழக்கவழக்கங்கள், கலாச்சாரங்கள், போர்பயிற்சி உள்பட அனைத்தையும் கற்றுத்தருவார்கள். ஏழு அல்லது எட்டு வயதில் ஒரு பையனுக்குரிய மணப்பெண்ணை நிச்சயம் செய்துவிடுவார்கள். பொறுமை அவசியம். இது குழந்தை திருமணமல்ல. அச்சிறுவனும், சிறுமியும் பருவ வயதை எட்டிய பின்னரே திருமணம் நடைபெறும்.

இதெல்லாம் சரி, டெமுஜின் கதை என்னவாயிற்று என்கிறீர்களா? கொஞ்சம் போய் சென்ற அத்தியாயத்தில் உள்ள கடைசி வாக்கியத்தைக் கவனியுங்கள்.

‘டெமுஜினுக்கு ஒன்பது வயதாகிவிட்டது. அவனுக்கான துணையை நாம் தேட வேண்டும்’ – ஹோலுன்.

‘உண்மைதான். நான் என் தோழர்களிடத்தில் இது பற்றி சொல்கிறேன். இது சரியான தருணம்தான்.’

யெசுகெய் (டெமுஜின் தந்தை) ஹோலுனிடம் (தாய்) சொன்னார். உடனே ஹோலுன், என்னிடம் ஒரு யோசனை இருக்கிறது என்றாள்.

தொடரை தொடர்ந்து நுணுக்கமாக படித்து வருபவர்களுள் சிலர் அது என்ன யோசனை என யூகிக்கலாம். மற்றவர்கள் அடுத்தவாரம்வரைக் காத்திருங்கள்.

****************************************************************************************-தொடரும்-4

தளம் குறித்த தங்கள் கருத்துகளை தொடர்ந்து பதிவு செய்யுங்கள். தங்களைப் போன்றவர்களின் ஆதரவு காரணமாய் தளத்தின் பார்வையாளர்கள் அதிகரித்து வருகின்றனர். எனது முதல் நாவல் முயற்சியான கோவர்த்தனன்  50-க்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று சிறப்பான வரவேற்பு பெற்றுள்ளது. அடுத்த அத்தியாயம் எப்போது வருமென தோழர்கள் பலரும் அறிய விரும்புவதால், கூறிவிடுகிறேன். 30-09-12 அன்று இரண்டாம் அத்தியாயம் வரும். தொடர்ந்து 15-16 நாட்களுக்குள் வெளியிடத் திட்டம். மேலும் தகவல்கள். கருத்துகள் கேட்கவோ, கூறவோ விரும்பினால் எப்போதும் தொடர்பு கொள்ளலாம்!!

Advertisements

2 thoughts on “டெமுஜின் கதை-4

    1. தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி
      பொறுத்தருள்க.. இது வரலாற்று நாவல் அல்ல. உண்மையான வரலாறு. சுவைகருதி பிரித்து தர நேர்ந்தது.

மறுமொழியிட

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s