நவீன தத்துவங்கள்

அண்ணன் ஓஜஸ் அவர்கள், அடிக்கடி சில தத்துவங்களை உதிர்ப்பார். நாம் எல்லோருமே வாழ்க்கையில் அவ்வப்போது தத்துவங்களை உதிர்ப்பதுண்டு. அவற்றை அண்ணன் ஓஜஸ் போலவே நாமும் மறுப்பதுண்டு. காரணங்கள் இருக்கிறது.

தத்துவங்கள் என்றாலே புரியாத சொற்றொடர்கள் என நமக்கு நாமே பழகிக் கொண்டுள்ளோம். இதை நீங்கள் புரிந்து கொள்ள ட்விட்டருள் வந்தாலே போதும். ஒவ்வொருவர் மனதிலும் எண்ண அலைகள் பாய்ந்தோடுகின்றன. சில நேரங்கள் தத்துவங்கள் கேலிக்குரியனவாகி விடுமோ என்ற அச்சமும், தத்துவங்கள் கூறினாலே நாமெல்லாம் புத்தனாகி விடுவோமோ என்ற ’மனபிராந்தியுமே’ காரணம்.

இத்தனை பீடிகை போடுவதால் இது ஏதோ ஒரு சீரியஸ் பதிவு என எண்ணி வெளியேற முயற்சிக்க வேண்டாம். ரொம்ப சாதாரணமான பதிவுதான்!

நமக்குச் சொந்தமான பொருட்களை நம்மை விட பிறர் (உதாரணமாக-நண்பர்கள்(!)) அதிகமாய் பயன்படுத்தும்போது நமக்கு லேசாக இதயம் வலிப்பது போல தோன்றலாம்!!! சிலர் பேனாவெல்லாம் மனைவி மாதிரி!! யாருக்கும் ஓசி குடுக்க கூடாது என்றெல்லாம் தத்துவங்கள்(!) வைத்திருப்பீர்கள்.

அது போன்ற ஒரு விசயம்தான் இந்த பதிவும் கூட.

மிக எதேச்சையாக ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் இடம்பெற்ற ‘ராஜா கைய வச்சா’ பாடலைக் கேட்க நேர்ந்தது. இயல்பான ஒரு ஹீரோ என்ட்ரி பாடல் என்றாலும் இசை ரொம்ப ஈர்த்தது. பாடலின் இறுதி ஸ்டான்ஸாவில் (Stanza) குறிப்பிட்ட சில வரிகள் சிறப்பாக இருந்ததாய் நினைக்கிறேன். அந்த வரிகளை நினைவூட்ட விருப்பமில்லை. நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். எனது எண்ணம் இப்படி சென்றது.

எப்படி?

கணினி வைத்திருக்கும் எல்லோரும் (இங்கே குறிப்பிட்டது லேப்டாப் (அ) பெர்சனல் கம்ப்யூட்டர்) இதை உணர்ந்திருக்க முடியும். அடுத்தவர் உங்கள் கணினியை உபயோகிப்பதை. சரி. விசயத்திற்கு வருவோம். அதற்கு முன் இந்த பாடல்(!) வரிகளை கவனியுங்கள்.

“கன்னிப்பொண்ணா நெனச்சு லேப்(Lap)பத் தொடனும்.

வாங்கியவன் விரல்தான் மேலப் படணும்.

கண்டவங்க எடுத்தா கெட்டுப் போயிடும்!

அக்கு-அக்கா அழகு விட்டுப் போயிடும்!

வாங்கினவந்தான் (பபபப்பப்பா)

அத தொட்டிடனும். (பபபப்பப்பா)

தன் திறமையெல்லாம் (பபபப்பப்பா)

அவன் காட்டிடனும். (பபபப்பப்பா)

ஓரிடத்தில் உருவாகி வேறிடத்தில் விலை போகும்!

லேப்(Lap)பினைப் போல் பெண் இனமும், கொண்டவனைப் போய்ச் சேரும்!

வேகம் கொண்டாட, லேப்(Lap)பும் பெண் போல, தேகம் சூடாகுமே!

*- இப்பாடல் தழுவி எழுதப் பட்டது.

**-மூலப் பாடல் வாலி அவர்களால் எழுதப்பட்டது.

***- மூலத்தில் லேப்-ற்கு பதிலாக கார் என்றிருக்கும்.

****-முழுக்கவும் கற்பனை கலந்து எழுதப்பட்ட பதிவு.

#-பெண்களை இழிவுபடுத்தும் எண்ணம் ‘அம்மா சத்தியமாக’ இல்லை.

எக்ஸ்ட்ரா:

 • தூக்கம் வராமலோ, பொழுது போகாமலிருந்தாலோ, இந்த பதிவில் ’தத்துவங்கள்’ (ம) ஆச்சர்யக் குறிகளும் எத்தனை முறை என எண்ணிப் பயன் பெறலாம்.
 • இதை சீரியஸான பதிவு என எண்ணி படிக்கத் தொடங்கியவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்!!
Advertisements

6 thoughts on “நவீன தத்துவங்கள்

 1. கடைசி வரை 16 ‘!’ குறிகள் உள்ளன!!!! 9 தத்துவங்கள் , அந்த Tags columnல உள்ளதும் சேர்த்து !!!! செம பதிவு, செம நேரத்துல, வாழ்த்துகள் பாஸ். கலக்குங்க 🙂

  நாற்சந்தியிலிருந்து,
  ஓஜஸ்

 2. மறுமொழியிட்டு வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் மனதிலிருந்து நன்றி சொல்வதைத் தவிர வேறெதுவும் என்னால் தற்போது இயலாது.
  மற்றுமோர் தகவல் இப்பதிவு wordpress-ல் சிறந்த 10 பதிவுகளில் ஒன்றாக நேற்று இரவு வந்திருக்கிறது.
  உங்களைப் போன்றவர்களால் இது சாத்தியமாயிற்று.
  தங்களின் நீடித்த ஆதரவு தொடர்ந்து அவசியம்

மறுமொழியிட

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s