டெமுஜின் கதை-3

3. மங்கோலியாவும்-சீனப் பெருஞ்சுவரும்

டெமுஜின் என்கிற வீரர் கதையில் சில வரலாற்று நிகழ்வுகளும், செய்திகளும் குறுக்கிடுவது இயல்புதானே! மங்கோலியா என்கிற நாட்டை நீங்கள் வரைபடத்தில் பார்த்தால்,

சைபீரியா,ரஷ்யாவின் வடபகுதி, சீனா, மத்திய கிழக்கு, மத்திய ஆசியா பகுதிகளுக்கெல்லாம் இடையேதான் மங்கோலியா உள்ளது. சுற்றிலும் மலைப்பாங்கான சமவெளிப் பகுதிகள், மரங்களே இல்லாத பகுதிகளாக இருக்கும். ஆங்கிலத்தில் ஸ்டெப்பி என்பார்கள்.

Steppe – a large area of land with grass but no trees, especially in south-eastern Europe, Russia and northern Asia

கி.பி 3-ம் நூற்றாண்டில் விவசாயம், வேட்டையாடுதலையே முக்கிய தொழிலாக கொண்டுள்ளனர். பெரும்பாலும் நாடோடிக் கூட்டங்களாகவே அப்போதைய மங்கோலிய மக்கள் இருந்து வந்துள்ளனர். கால்நடைகளை அதிகளவில் வளர்ப்பதில் பிரியமுள்ளவர்கள். முக்கியமாக குதிரைகள். மங்கோல் என்ற சொல்லுக்கே ‘குதிரையின் முதுகில் வாழும் மக்கள்’ என்று பொருள். ‘அருகிலிருக்கும் நெருப்பு என்ற அர்த்தமும் உண்டு.

சீனாவிற்கு அருகே இருந்தபடியால், அவர்களின் வளம் மங்கோலியர்களுக்கு தேவைப்பட்டிருக்கிறது. அவ்வப்போது சீனாவுடன் சண்டை நடந்துள்ளது. அவர்கள் மங்கோலியர்களைத் தடுக்க எண்ணியே தடுப்புச் சுவர்கள் கட்டத் தொடங்கினர். மனிதர்கள் சுவரைத் தாண்டிடலாம். ஆனால் குதிரைகள்? எனவேதான் சீனர்கள் தடுப்புச் சுவர்களைக் கட்டத்துவங்கினர். அவ்வாறு பல நூற்றாண்டுகளாக, பல்வேறு வம்சத்தினரால் கட்டப்பட்ட சுவர்கள்தாம் தற்போதைய சீனப் பெருஞ்சுவர்.

கொரியாவின் எல்லையில் ‘யாலு’ நதிக்கரையிலிருந்து, ’கோபி’ பாலைவனம் வரையுள்ள சீனப் பெருஞ்சுவர் 6400 கி.மீ நீளம் கொண்டது. 16-ம் நூற்றாண்டில் முழுமை பெற்றது.

மங்கோலியர்களிடம் வருவோம்.

ஆனான், கெருலென், துல் – இம்மூன்று நதிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் மாறிமாறி குடியிருப்புகளை அமைத்து வந்துள்ளனர். பருவநிலைக்கேற்றபடி இடத்தை மாற்றுவார்கள். கற்களால் ஆன வீடுகளை அவர்கள் கட்டுவதில்லை. ‘கெர்’ எனும் கூடாரங்களில்தான் வசித்தனர்.

கெர் என்பது வட்டவடிவக் கூடாரம். சாதாரணக் கூடாரம் அல்ல. கிட்ட்த்தட்ட வீட்டிற்கான அளவு ஓரளவு பெரிய கூடாரங்கள். வாசல், சன்னல் எல்லாமே இருக்கும்.

செம்மறியாடுகளை ஆயிரக்கணக்கில் வளர்ப்பர். அதன் ரோமத்தில் துணி செய்து அதை மேற்கூரையாக, போர்வையாக பயன்படுத்துவர். காரணம் மங்கோலியா குளிர் பிரதேசம். வீடுகளை அலேக்காக தூக்கி பெரிய வண்டிகளில் வைத்து வேறு இடங்களில் மாற்றிக் கொள்வர்.

ஹமுங் எனும் மங்கோலியர்களில் முதல் கான் காபுல் கான். சீன ஆக்கிரமிப்பை முதலில் முறியடித்தவர் அவர்தான். அதன்பின் அம்பாகெய் கான், ஹோட்டுலா கான் முதலானோர் இருந்துள்ளனர். ஹோட்டுலா கானின் இறப்பிற்கு பின்தற்காலிக தலைவராக (கான் அல்ல.) போர்கிஜின் இனக்குழுவைச் சேர்ந்த யெசுகெய் பொறுப்பேற்றார். யெசுகெய்தான் டெமுஜினின் தந்தை என்பது நினைவூட்டலுக்காக.

டெமுஜினைத் தவிர மற்ற இதர தகவல்களைப் பார்த்தாயிற்று. இனி கூடுதல் தகவல்கள் இல்லாமல் நேரடியாக டெமுஜினைப் பார்ப்போம்.

மங்கோலியர்கள் ஆணாயிருந்தாலும், பெண்ணாயிருந்தாலும் நான்கு வயதிலேயே குதிரையேற்றம் பழக விடுவார்கள். உட்கார முடியாது என்பதால், குதிரை மீது நின்றபடி ஓட்ட பயிற்சியளிப்பார்கள். டெமுஜின் 4 வயதை அடையும் முன்பே குதிரையேறக் கற்றுவிட்டான்.

வில் வித்தை! அம்பின் தடிமன் கூட இல்லாத விரல்களைக் கொண்டு டெமுஜின் அற்புதமாக வேட்டையாடுவான். எலியும் தப்பாது டெமுஜினிடம்!

மீன்பிடித்தல் என்பது தூண்டில் கொண்டல்ல! ஈட்டி கொண்டு. முட்டியளவு நீரில் இறங்கி கூரிய, சிறிய ஈட்டி மூலம் குறி தவறாமல் குத்தி மீனைப் பிடிப்பார்கள்.

இப்போது (கதைப்படி!) டெமுஜினுக்கு வயது 9.

-இப்ப தானே வளரத் தொடங்கியிருக்கிறான். பொறுத்திருங்கள்!!

One comment

மறுமொழியிட

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s