கோவர்த்தனன் -1 (புதிய தொடர்)

ஒரு வேண்டுகோள்:  இப்பதிவை/கதையைத் தொடர்வதற்கு முன் ஒரு ஒப்புதல் வாக்குமூலம் என்கிற பதிவைப் படித்துவிட்டு தொடரவும். காரணம் இந்த தொடருக்கான முன்னுரையைப் படித்து, பிறகு கருத்து சொல்லலாம்.

கோவர்த்தனன்

 

அந்த இரவை அவரால் கண்டிப்பாக மறக்க முடியவில்லை. அவர் நிலையிலிருந்து பார்க்கும் எவராலும் அந்த இரவை மறக்க முடியாது. காரணம் இருக்கிறது. அன்றுதான் அவரின் ஆருயிர் மகள் காணாமல் போனாள். இன்றோடு இரு நாட்கள் முடிந்துவிட்டது. அவரின் கண்ணீரும் வற்றிவிட்டது. இப்படிப்பட்ட இக்கட்டான நிலையில் அவரைக் காண முடியாமல் அவரின் தோழர் ஒருவர் அவருக்கு ஆறுதல் கூறினார்.

“நீங்கள் கண்டிப்பாக என்னுடன் இப்போ வரணும்”.

“எங்க?”

“கண்டிப்பா காவல்நிலையத்திற்கு அல்ல.”

.”நீ காவல்நிலையத்துக்கு அழைத்திருந்தால் நான் மறுத்திருப்பேன். எனக்கு நன்றாகத் தெரியும். நமது ஊரில் காவல்நிலையம் செல்வதெல்லாம் வீண் வேலை. உனக்கும் தெரியும். எனக்கும் தெரியும் யார் குற்றவாளி என்று.“

“யார் குற்றவாளி என்று உங்களுக்கு தெரிந்தபட்சத்தில் அவனுக்கு நியாயமான தண்டனை கிடைக்க வேண்டாமா?”

என்ன சொல்றீங்க நீங்க?”

என்னோடு வாருங்கள். சொல்கிறேன்.

இப்போதேவா?

இல்லையில்லை. நாளை காலை.

சரி வர முயற்சிக்கிறேன்.

அந்த இரவு சிறப்பாக ஒருவேளை அவருக்கு இருந்திருக்கலாம். அடுத்த நாள் அத்தனை நன்றாக இல்லை. பொழுது விடிந்த சில மணிநேரங்களில் காவலர்கள் இருவர் வீட்டின் கதவைத் தட்டினர்.

என்ன விஷயம் என அவர் கேட்பதற்குள்ளாகவே  காவல் வண்டியில் அவர் ஏற்றப்பட்டார். அந்த வண்டி கரும்புகையைக் கக்கியபடி ஒரு பூங்காவின் வாசலை அடைந்தது. நேற்று மாலை வரை பலருக்கும் இனிய தருணங்களைத் தந்து கொண்டிருந்த  பூங்கா இரவில் பரபரப்பானது. ஒரு கொலை நடந்திருக்கலாம்  என சந்தேகிக்கப்பட்டது. ஏனெனில் ஒருமாதிரியான  துர்நாற்றம் அப்பகுதியில் வீசியதாக  புகார் எழுந்தது. இரவு முழுவதும் நடந்த சோதனையில் பூங்காவின் பின்புற வாசலுக்கு  முன்  மரங்களிலிருந்து விழுந்த  பூக்கள் குவிக்கப்பட்டு  ஒரு குன்றினைப் போல் காட்சியளித்தன. காவல் ஆய்வாளர் சந்தேகத்தின் அடிப்படையில்  பணியாளர்களின் உதவியோடு  அந்த குவியலை அகற்றச் சொன்னார்.

உண்மையிலேயே சரியாக கணித்தாரா? இல்லை எதேச்சையாக கூறினாரா? எனப் புரியாமல் பணியாளர்கள் விழித்தனர். நிச்சயமாக  இதுபற்றிய விசாரணையில் பலர் தலை உருளக்கூடும் என்றே ஆய்வாளர் நினைத்திருப்பார். காரணம் இருந்தது. உள்ளே  ஒரு இளம்பெண்ணின் சடலம் கிடந்தது.

வாய் துணியால் மூடப்பட்டிருந்தது. கை ரத்தம் தோய்ந்த நிலையில், காயங்களுடன் மேல்நோக்கியவாறு இருந்தது. மொத்தத்தில் சடலம் முழுமையாக சிதைந்து காணப்பட்டது. அப்பெண் துன்புறுத்திக் கொல்லப்பட்டிருக்கலாம்  என்ற முடிவுக்கு ஆய்வாளர் வந்தார். இவ்வளவும் முன்தினம் மாலையிலிருந்து இன்றையதினம் காலை வரை நடந்தவை.

இளம்பெண் கொலை என்று தெரிந்தவுடன் கடந்த ஒரு மாதத்தில்  காணாமல்போன பெண்களைப் பற்றிய தகவல்கள் கேட்டு அத்தனை காவல்நிலையங்களுக்கும் செய்தி அனுப்பப்பட்டது. இதன்பேரில் மொத்தமாய்  ஏழு பேர் பூங்கா வாசல் முன்  காவல் வண்டியில் வந்து இறங்கினர்.

இதற்குள்ளாக தகவல் தெரிந்து பத்திரிகையாளர்கள்  பூங்காவைச் சுற்றிவளைத்தனர். ஆனால் காவலர்கள் அவர்கள் யாரையும் பூங்காவினுள் அனுமதிக்கவில்லை. எனினும் இளம்பெண் கொலையுண்டதாக  தகவல் நகரம் முழுவதும் மின்னலை விடவும் வேகமாய் சென்று சேர்ந்தது.

 

இதனிடையே புகார் அளித்த ஏழு பேரும் பூங்காவின் பின்புறம்  அழைத்துச் செல்லப்பட்டனர். சில அடையாளங்கள்  சொல்லப்பட்டு காண்பிக்கப்பட்டது. இதில் சிலர் இல்லையென மறுத்து வெளியேறினர். ஒவ்வொருவர் உள்ளத்திலும் நம்  பெண்ணாயிருக்குமோ  என்ற பதைபதைப்பை உணர முடிந்தது. நான்காவது நபராக முன்சொன்ன நபர் வந்தார். அவர் சில அடையாளங்கள் சொல்ல, ஒரு மூத்த காவலர் உணர்ச்சிப்பெருக்குடன் அவரை பின்னால் உந்திச் சென்றார்.

“அய்யா கொஞ்சம் பொறுமையா நான் சொல்றதக் கேளுங்க.அவசரப்படாதீங்க .மனச கல்லாக்கிடுங்க ”

“என்ன சொல்ல வர்றீங்க ” என்றவரின் கண்கள் கண்ணீரைச் சுமந்து நின்றன.

“இறந்தது உங்க பொண்ணுதான்.”

“………………..”

“எப்படியும் எங்க டிபார்ட்மெண்ட்ல விசாரணை பண்ணி…… ”

“பொணத்த அடக்கம் பண்ண தந்துடுவீங்க. அதானே!”

“அது இல்லீங்க சார். கொலையாளிய கண்டுபுடுச்சு…….”

“தூக்குல போட்ருவீங்களா?”

“இல்லீங்க. சரியான தண்டனைய வாங்கித் தருவோம்.”

“……..”

நீதியின் மீது நம்பிக்கையைத் தொலைத்தவராய் அவ்விடத்தை விட்டு அகன்றார்.

“சார். போஸ்ட் மார்ட்டம் ரிப்போட் வந்ததும் வீட்டுக்கே பாடிய கொண்டு வந்துருவோம்.”

“…………”

 

பூங்காவை விட்டு வீடு வந்து சேர்ந்தார் அவர். இப்போது அப்பெண்ணின் தாய்க்கும் நம்பிக்கை தகர்ந்தது. இருவருமே ஒருவரையொருவர் தேற்ற முடியாத துன்பத்துள் ஆழ்ந்தனர். அவ்வளவையும் கண்ட வானமும் அப்போது சாரலாய் அழுதது. சிறிது நேரம் கழித்து கதவு தட்டப்படும் ஓசை கேட்டது. சென்று கதவைத் திறந்தார்.

“சார். நான் போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து வர்றேன். விசாரணைக்காக வர்றீங்களா? ”

“…….”

“சார். நீங்க அமைதியா இருந்தா உங்க பொண்ண கொலை பன்னுனவன கண்டு பிடிக்க முடியாது.”

பிறகு மனைவி வலியுறுத்தியதால் ஒரு வழியாக கிளம்பிச் சென்றார் அவர். வந்த காவலருக்கு வயது இருபத்தைந்து அல்லது கொஞ்சம் முன்ன-பின்ன இருக்கலாம். செல்லும் வழியில் அவரிடம் கொஞ்சம் பேச்சு கொடுத்தார்.

“சார்…. நீங்க சொல்ற பதில வச்சுதான் நாங்க கொலையாளிய பிடிக்க முடியும். ஸோ ப்ளீஸ் கோ-ஆப்ரேட் வித் அஸ் .”

“தம்பி. உன்கிட்ட ஒண்ணு கேக்கட்டுமா?”

“கேளுங்க சார்.”

“கொலை பண்ணுனவன்-னு சொன்னீங்களே. அப்ப கொலை பண்ணவன் ஆண் தான்னு முடிவு பண்ணீட்டீங்களா.”

“அப்படி இல்ல சார். பொண்ண கொடூரமா கொலை பண்ணின அடிப்படையில ஒரு யூகம். அவ்ளோதான்.”

“ஒரு வேளை இத ஒரு பொண்ணே பண்ணிருக்கலாமே!”

“அதுக்கு பெரிய வாய்ப்பில்லை சார். கொலை பண்றவரைக்கும் வேணா ஒக்கே. பட் குழி தோண்டி  புதைச்சு மூடிருக்குறத பாத்தாலே தெரியும். எனிவே இந்த ரூட்லயும் விசாரணை பண்றோம் சார். ”

இந்த உரையாடல் முடியவும் காவல் விசாரணை அலுவலகம் சென்று சேரவும் சரியாக இருந்தது.  இருவரும் விசாரணை அதிகாரியின்  அறைக்குள் சென்றனர். அங்கிருந்த நாற்காலியில் அவர் அமர பின்புறம் அந்த காவலரும், இன்னொரு காவலரும் நின்றிருந்தனர். இப்போது அங்கே விசாரணை ஆரம்பமானது.

 

“உங்க பேர் என்ன?”

“மூர்த்தி”

“இந்த விசாரணைல எல்லா தகவல்களையும் உண்மையா கொடுங்க. அப்பதான் குற்றவாளிய சீக்கிரம் பிடிக்க முடியும்.”

“சரிங்க சார்.”

“இதுக்காக உங்க பின்னாடி நிக்கிற ரெண்டு பேரையும் நியமிச்சுருக்காங்க. உங்கள கூட்டிட்டு வந்தார்ல அவர் பேர் செழியன். இன்னொருத்தர் வேல்ராசு. ”

செழியனும், வேல்ராசும் மூர்த்திக்குப் பக்கத்தில் வந்து அமர்ந்தனர். வேல்ராசு செழியனைக் காட்டிலும் மூத்தவர். இருவரும் அமர்ந்த பின்னர் விசாரணை அதிகாரி தொடர்ந்தார்.

“இன்னைக்குள்ளவே போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் எங்களுக்கு கிடச்சிடும்னு நம்புறோம். முடிஞ்சமட்டும் சீக்கிரமா ஒங்க பொண்ணு பாடிய குடுத்துருவோம். நீங்க இப்ப போகலாம்.”

மூர்த்தி அறையை விட்டு வெளியேறியவுடன் விசாரணை அதிகாரி மற்ற இருவருக்கும் வழக்கமான கட்டளைகளைக் கூறிச் சென்றார்.

செழியன் மட்டும் அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்றான். எப்படியாவது இக்கொலை பற்றிய உண்மையை விரைந்து கண்டு கொள்ள எண்ணியிருக்கலாம். மருத்துவர் அறைக்குள் செழியன் நுழைந்தான். சம்பிரதாயமான அறிமுகத்திற்குப் பின்,

“சார். இதுவரையான நிலவரம் பத்தி சொன்னா ரொம்ப உதவியா இருக்கும்.”

“எஃப்.ஐ.ஆர். போட்டாச்சா சார்?”

“நீங்க சொல்ற தகவல வச்சுதான் எழுதனும் சார்.”

“சரி. அந்த பொண்ணு சாதாரணமா சாகல.”

“தெரியும் சார். பாடிய வெளிய எடுக்கும்போதே கண்டுபிடிச்சாச்சு.”

“வெறும் காயங்கள மட்டும் நான் சொல்லல சார்.”

”….”

“அந்த பொண்ணக் கற்பழிச்சுருக்காங்க. ஆமா. உடம்புல இருக்க கீறல்களும் சரி, வாயில் கட்டிருந்த துணியும் சரி. என் முடிவதான் சொல்லுது.”

”அதாவது சார். கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாமோ?”

”எக்ஸாக்ட்லி. அவ ஒருவேளை உயிருக்குப் போராடி கொல்லப்பட்டிருக்கலாம்.”

“அதென்ன சார் ஒருவேளை?”

“உண்மை என்னனு நீங்கதான் சார் கண்டுபிடிக்கணும்.”

”ஒக்கே சார். ஃபுல் ரிப்போர்ட் வந்தவுடனே சொல்லிடுங்க.”

செழியன் தகவல்களை வேல்ராசிடம் சொல்லி பதிவு செய்கிறான். இதனிடையே செழியன் மீண்டும் மூர்த்தி இல்லத்திற்கு செல்கிறான். சாதாரண உடையில்.

“சார்….”

“வாங்க சார். என்ன இந்நேரத்தில?”

“சும்மாதான் சார் வந்தேன். வாக்கிங் போற பழக்கம் இருக்கா சார்?”

“என்ன திடீர்னு ஏதாவது விசாரணையா?”

“அய்யோ! அப்டிலாம் இல்ல சார். தனியா பேசனும். அதான்!”

சில நிமிடங்களில் இருவரும் நகரின் முதன்மை வீதியில் சென்று கொண்டிருக்கின்றனர். நகரமோ பகல்நேர பரபரப்பைத் தொலைத்து அமைதியைச் சந்திரன் வழியே பாய்ச்சியது. அப்படி ஒரு சம்பவமே காலையில் நடந்ததாகவே யாருக்கும் கவலையில்லை.

செழியன் தான் தொடங்கினான்.

”சார். ஒரு ரிக்வெஸ்ட். ”

“என்ன.”

“என்னை பொதுஇடத்துல மட்டும் சார்னு கூப்டுக்கோங்க!”

“அப்டின்னா….!”

“சாதாரணமா தம்பினே கூப்பிடுங்க.”

“ஏன் அப்படி சொல்றீங்க?”

“மதியம் உங்க முகத்த பாத்தவுடனே ஒரு ஞாபகம் சார். ஒரு மரியாதை ஏனோ தெரியல….”

“சரிங்க தம்பி. இப்ப எதுக்காக கூப்பிட்டீங்க?”

“வழக்கு பத்திதான். சில விசயங்கள சொல்லனும். அப்புறம் கேட்கனும்.”

“என்ன விசயம்?”

“அதாவது சார்……. உங்க பொண்ணு சாதாரணமா சாகல……. கற்பழிச்சு கொல்லப்பட்டிருக்காங்க.”

”நான் காலையில பாத்தப்பவே தெரிஞ்சுடுச்சு தம்பி.”

“அப்ப எனக்கு நீங்க சில விசயங்கள சொல்லனும்.”

”என்ன கேக்கப் போறீங்கன்னு தெரியும் தம்பி. யார் மேல சந்தேகம்னுதானே! ”

“எக்ஸாக்ட்லி சார்.”

“அத நான் உண்மையான விசாரணையிலேயே சொல்வேனு நீங்க எதிர்பாக்கல அப்டிதானே!”

“…….”

“உள்ள எனக்கிருக்கிற வலி எனக்குதான் தம்பி தெரியும்.”

“…………”

“சந்தேகம் எனக்கு முன்னாடி என் பொண்ணுக்கே வந்திடுச்சு தம்பி. அப்பவே கொஞ்சம் தயாரா இருந்திருக்கனும்.”

”சார். நான் ஏன் தனியா இத கேக்கிறேன்னா இந்த கேஸ எப்படியாவது நான் நல்லபடியா முடிக்கனும்னு ஒரு வெறிதான் சார். நீங்க தயங்காம, மறைக்காம சொல்லுங்க சார்.”

”…….”

“உங்களோட அமைதியே சில உண்மைகள சொல்லுது சார்.”

“சரி. அப்ப அந்த உண்மைகள சொல்லுங்க தம்பி.”

“உங்க பொண்ணுக்கு இப்படி ஏதாவது நடக்கும்னு உங்களுக்கு ஏற்கனவே தெரியும்தானே?”

“ஆமாம். என் பொண்ணுக்கு கூட தெரியுமே!”

“சார். எனக்கே கொஞ்சம் குழப்பமா இருக்கு. கொஞ்சம் புரியுற மாதிரி சொல்றீங்களா?”

“சொல்றேன் தம்பி. ஆனா நாளைக்கு காலைல. இப்ப வேணாம். லேட்டாயிடுச்சு. ஒய்ஃப் தனியா இருப்பா. அவளையாச்சும் நான் பாதுகாக்கனும்ல.”

“…….”

இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்கின்றனர். இருவர் முகத்திலும் தோன்றிய உணர்ச்சிகளை வார்த்தைகளில் சொல்லி உணர்ச்சிகளைக் குறைக்க முடியாது. இதன் தொடர்ச்சியாக இருவரும் தத்தமது வீடுகளுக்கு திரும்பினர். செழியனின் மனம் மட்டும் குழம்பியிருந்தது. மூர்த்தியின் மனதை அடுத்த நாளிலாவது அறிய எண்ணினான்.

                                                                                                                                                                                                                                                  ҉  01 

Advertisements

4 thoughts on “கோவர்த்தனன் -1 (புதிய தொடர்)

  1. செம ஓபெநிங், சரளமான நடை. விறு விறு சம்பவங்கள். மூர்த்தி இன்றோ சூப்பர், சரியான இடத்தில் தொடரும் …. வெற்றிக்கு வாழ்த்துக்கள். ஆனால் ஆரம்பம் முதலே “வேட்டையாடு விளையாடு” பீலிங், பல எடத்தில தட்டுது…. மூர்த்திக்கு சம்பவம் நடக்க வாய்ப்பு உள்ளது, என்று, ஏற்கனவே தெரியும், சோ வேறு ஒரு கதை இது…….. கலக்குங்கள்… கதை போக்கை பற்றி சில யூகங்கள் செய்து விட்டேன்…. பார்போம் எப்படி வளர்கிறது என்று ;))

மறுமொழியிட

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s