’அண்ணா’ந்து பார்த்தேன்!

இன்று அண்ணாவின் பிறந்தநாள் என்று பெரும்பாலும் தெரிந்திருக்கும். தெரியாதவர்கள் இப்போது தெரிந்து கொள்ளுங்கள். ஆம் அவர் அண்ணாதான். ஆம் அவர் பேரறிஞர்தான். வேறென்ன சொல்லலாம் என எனக்குத் தோன்றவில்லை. அண்ணாதுரை அவர்களைப் பற்றி ஏராளமான பெரிய/சிறிய/நடுத்தர அளவிலான புத்தகங்கள் இருக்கின்றன. நான் அதில் ஒரே ஒரு புத்தகத்தில் இருந்து சில தகவல்களைத் தர விரும்புகிறேன். அந்த நூலை ஏன் தேர்ந்தெடுத்தேன் என்பதற்கான ஒரு காரணம் மட்டும் இங்கே.

இத்தனை வருடங்களில் நான் படித்த புத்தகங்களிலேயே விரைவாக படித்த புத்தகங்களுள் இதுவும் ஒன்று. அந்த புத்தகம் வேறொரு தோழருடையது. வேறு வேளையே இல்லாது வாளாதிருந்த நான், அப்புத்தகத்தைக் கண்டவுடன் அதிசயித்தேன். அப்புத்தகம் குறித்து ஏற்கனவே அறிந்திருந்தபடியால் தோழரிடம் படிக்கத் தருமாறு அனுமதி கேட்டேன். என்ன நினைத்தாரோ உடனே தந்துவிட்டார். கிட்டத்தட்ட 2 மணிநேர அளவில் அந்த நூலைப் படித்து முடித்தேன். அவரே அதிசயித்தார். ஆனால் மற்றுமோர் வேண்டுகோள் வைத்தேன். அதையும் ஏற்றார். அதாகப்பட்டது, இந்நூல் மிகச் சிறப்பாக இருப்பதால் இதை ஒருநாள் வைத்திருந்து தருகிறேன் என்றேன். ஒப்புக்கொண்டார்.

நான் அன்று மாலையே அதை மீண்டும் படித்து சில குறிப்புகளை எடுத்து வைத்தேன். இவ்வளவு சொல்லிவிட்டேன். அந்த நூலின் பெயரையும் சொல்லிவிடுகிறேன். அது எழுத்தாளர் என்.சொக்கன் அவர்கள் எழுதிய ‘அண்ணா’ந்து பார்! என்கிற நூல்.

இந்த இடத்தில் மற்றுமோர் செய்தியையும் முன்வைக்க விருப்பம். பொதுவாக கிழக்குப் பதிப்பகம் வெளியிடும் நூல்களின் எண்களை பார்ப்பது வழக்கம். முதல் எண் உள்ள புத்தகம் எதுவாக இருக்கும் என பலநாள் அலைந்து கடந்த ஜூன் மாதம்தான் அறிய நேர்ந்தது. அதுவும் என்.சொக்கன் அவர்கள் எழுதிய ‘அம்பானி’ வாழ்க்கை வரலாற்று நூல்தான். ஒருவேளை சொக்கன் சார் இதைப் படித்தால் அவருக்கு என் வாழ்த்துகள். போதும் கதை. அண்ணாவின் பிறந்தநாளில் அவரைப் பற்றி கொஞ்சமேனும் அறியலாமே. இனி புத்தகத்திலிருந்து சில வரிகள்….

  • ஆளுங்கட்சியாக இருந்தாலும்  சரி. எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி. அண்ணாவின் பெயரைச் சொல்லாமல் எந்தவொரு சக்தியாலும் இன்று அரசியல் செய்ய முடியாது.
  • தனிப்பட்ட வாழ்க்கை, சமூக வாழ்க்கை என்று பிரித்தறிய முடியாதபடி வாழ்ந்தவர் அண்ணா. இந்தியா சுதந்திரம் பெற்ற முதல் 20 ஆண்டுகளில், அவருடைய அரசியல் சமூகக் கொள்கைகள், நடவடிக்கைகள்தான்  தமிழகத்தின் தலைவிதியை நிர்ணயித்திருக்கின்றன.
  • அவரால் தோற்கடிக்கப்பட்ட காங்கிரஸ், இன்றுவரை இங்கே தனித்து நின்று ஜெயிக்கமுடிந்ததில்லை. அண்ணாவைப் படிப்பதும் தமிழகத்தின் ஆரம்பகால அரசியல் வரலாறைப் புரட்டிப்பார்ப்பதும் ஒன்றுதான்.

பச்சையப்பன் கல்லூரி முதல்வர் பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தியைப் பற்றி:

“முதல் ஆண்டு மாணவர்களுக்கு அவர் சர்வாதிகாரி. இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு அவர் சக்கரவர்த்தி. மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு அவர் ஒரு தோழர்!”

பெரியார் பற்றி:

எந்தப் பிரச்சினையில் பெரியாருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும், அதனை வலிக்காமல் சொல்வதில் அண்ணா நிபுணர். மிகுந்த மரியாதையுடன், நீங்கள் செய்வது தவறு என்பதை பெரியாரிடமே தயங்காமல் சொல்லிவிடுவார்.

பின்னாட்களில் பெரியாரே அண்ணாவை எதிர்த்தபோதுகூட, அவரைத்தவிர வேறு யாரும் தன்னுடைய தலைவராக முடியாது என்பதில் தெளிவாக இருந்தார்.

ஒருபோதும் பெரியாரை எதிர்த்து அரசியல் செய்வதில்லை என்பதை கண்டிப்பான கொள்கையாகப் பின்பற்றிக் கொண்டிருந்தார் .

’பெரியாரும் நானும் பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்திருக்கிறோம் என்று சொல்வது சரியல்ல! பெரியாரை நான் ஒருபோதும் பிரிந்தது கிடையாது! நான் எங்கிருந்தேனோ, அங்கெல்லாம்  என் உள்ளத்திலே பெரியார் இருப்பார். அவர் உள்ளத்தில் நான் இருப்பேன்!’

‘இந்த ஆட்சி, தந்தை பெரியாருக்கு எங்களுடைய காணிக்கை!’.

அரசியல்:

“நான் அரசியலில் மெதுவாகச் செல்கிறவன். அவசரமாகப் போய்க் குழியில் விழுந்து விடமாட்டேன் . அதற்காகப் பயந்தவன் என்றோ, அஞ்சி ஒதுங்குபவன் என்றோ  யாரும் என்னை நினைத்து விடவேண்டாம் !”

கட்சியை விட்டு யாரேனும் விலகினால் – ‘சட்டை கிழிவதுபோல் அல்ல , சதை பிய்ந்து விடுவது போல் வேதனைப்படுகிறேன் ‘.

‘வெறுமனே வெட்டவெளியில் நின்றுகொண்டு எங்களைப் பற்றிப் பேசாதீர்கள் . ஒருவேளை உங்களுக்கு நிஜமாகவே மக்கள் ஆதரவு இருந்தால் , சட்டசபைக்கு வந்து பேசத்தயாரா ?’ என்று திமுக –க்கு பகிரங்கமாக சவால் விட்டார் காமராஜர் .

காங்கிரஸ் சரித்திரத்தில், அவர்கள் செய்த மிகப்பெரிய தவறு இது . அந்த வினாடியில் தொடங்கிய சரிவில் இருந்து , அவர்களால் இன்று வரை மீளமுடியவில்லை .

சென்னை மேயர் தேர்தலில் முதன்முதலில் வென்றதற்கு:

காதலியைப் பார்ப்பதற்கு முன் அவளுடைய வளையல் சத்தத்தைக் கேட்டு இன்பம் அடைவதுபோல , கழகம் மேயர் பதவியைக் கொண்டாடியது.

ஒருபோதும் பெரியாரை எதிர்த்து அரசியல் செய்வதில்லை என்பதை கண்டிப்பான கொள்கையாகப் பின்பற்றிக் கொண்டிருந்தார் .

தேர்தலில் தோல்வி பெற்ற சமயம்:

நான் தோற்றதால் ,தோல்வி என்னை அழுத்தி விடும் என்று கருதாதீர்கள் .

எல்லாக் கிளைகளிலும் மலர் குலுங்கவேண்டும் என்கிற அவசியம் இல்லை .பூத்திருந்தால் போதும்!.

மற்றும் சில:

‘வெறும் எண்ணிக்கையை மட்டும் மனத்தில் கொண்டு முடிவெடுக்கக் கூடாது. அப்படித் தீர்மானிப்பதனால் நாம் நமது தேசியப் பறவையாக மயிலைத் தேர்ந்தெடுத்திருக்க்க் கூடாது, காகத்தைத்தான் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்!’.

‘கரமும் வலிக்கிறது, காகமும் கரைகிறது’

‘கவிதை அல்ல, கவிதையாக ஆக்கிக் கொள்ளலாம்’

‘நான் ஓவியன் அல்லன். ஓவியம் தீட்ட, கற்றுத் தோற்றவன்!’

கவி பாடிட நினைப்பு இருந்தும், அதில் முயற்சி செய்யாமலே காலத்தைக் கடத்தியவன்’

‘உள்ளத்தில் பதிந்ததை என்றும் மறவாமல் நினைவில் வைத்திருப்பேன்.

***********************************************************************

இது தவிர, மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு, ‘கடமை,கண்ணியம், கட்டுப்பாடு’ இன்னும் இன்னும் பல கருத்துகளை விதைத்திருக்கிறார் அண்ணா. அண்ணா ஆங்கிலத்திலும், தமிழிலும் சீரிய புலமை கொண்டவர். தமிழில் பல உரைநடை நூல்கள், நாடகங்கள் எழுதியுள்ளார். இவரது ஆங்கிலப் புலமை வியக்கத்தக்கது. நீண்ட வாக்கியங்களாகவும், சில சொற்களுள் அடங்கிடும் வாக்கியங்களாயும் எழுதுவதில் வல்லவர்.

எல்லோரையும் அரவணைக்கும் அரசியல் வித்தகரான அண்ணாவின் வாழ்வியல் நாமெல்லாம் அறிந்திருக்கக் கூடிய ஒன்று.

இதேநாள் புகழ்பெற்ற பொறியாளரான சர்.விஷ்வேஸ்வரய்யா அவர்களின் பிறந்த தினம். இந்த நாள் பொறியாளர் தினமாகவும் கொண்டாடப்படுகிறது. அவர் 1860-ம் ஆண்டு பிறந்தவர். அவர் பற்றி எழுதத் துவங்கினால் பதிவின் நோக்கம் குறையும் எனக் கருதி நிறைவு செய்ய விருப்பம்.

இறுதியாக இப்பதிவு முழுமை பெற உதவிய

 என்.சொக்கன் அவர்களுக்கும்,

நூலைத் தந்த தோழர் மனோஜ்குமார் அவர்களுக்கும் நன்றி.

Advertisements

3 thoughts on “’அண்ணா’ந்து பார்த்தேன்!

மறுமொழியிட

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s