தமிழ்-2

செப்டம்பர் மாதத்திற்கான அடுத்த தொடர். இது. ஏற்கனவே முன்னுரை கொடுத்தாயிற்று. கவிஞர் காசி ஆனந்தன் எழுதிய சில கவிதைகள் இசைப்பாடல்களாக “தமிழ் எங்கள் உயிரிலும் மேலாகும்” என்ற பெயரில் குறுந்தகடாக (CD) வெளியிடப்பட்டுள்ளது. அதன் பாடல்கள் தமிழ் மொழி குறித்த புதிய பார்வையை, பரிணாமத்தை எவர்க்கேனும் அளிக்கக்கூடும் என்ற நோக்கில் இப்பதிவை/ இத்தொடரைத் தொடங்குகிறோம்.

உண்மையிலேயே படித்த மாத்திரத்தில் உணர்ச்சியைத் தூண்டக் கூடிய எளிய வரிகள்தான். சில இடங்கள் அதீதமாய் இருப்பதாய் (எனக்குத்) தோன்றுகிறது. உங்கள் கருத்துகளையும் எதிர்பார்க்கிறேன்.

இப்பாடலுக்கு இசையமைத்து ”மகராசன்” அவர்கள் பாடியுள்ளார் என்பது கூடுதல் தகவல். இனி நேரே தமிழ் வெள்ளத்துள் மூழ்கிட அழைக்கிறோம்.

****************************************************

தமிழ் எங்கள் உயிரிலும் மேலாகும்- தமிழர்

இனம் காக்கும் வாளாகும் வேலாகும்

தமிழை சிலர் உலகில் வெறும் வாய்ப்பேச்சென்றார்

தமிழரோ தமிழை உயிர்மூச்சின் மூச்சென்றார்.

*********

இமயத்தில் வடநாட்டான் தமிழை பழித்தான்

இளங்கோவின் அண்ணன் அவனை அழித்தான்

திமிரோடு இந்திப்போர் வடவன் தொடுத்தான்

தீக்குளித்து மாவீரம் தமிழன் படைத்தான்

**********

வீச்சோடு எரிமலை நெருப்பாக எழுந்தோம்

வெறிகொண்ட பகைவர் மேல் இடியாக விழுந்தோம்

மூச்சோடு மொழிப்போரில் களமாடி வந்தோம்

முத்தமிழ் உயிர்வாழ உயிரையும் தந்தோம்

************

கடல்கொண்டும் அழியாத தமிழின் மேல் ஆணை

களம்கொண்டு உண்டெங்கள் தமிழ்வீரர் தானை

படைகோடி வந்தாலும் பணிவோமா இல்லை

பகைவென்று தமிழ் காப்பான் தமிழன் பிள்ளை

*********************************************

-அடுத்த பாடல் விரைவில் இதே தொடரின் கீழ் வெளிவரும். நன்றி.

Advertisements

மறுமொழியிட

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s