ஒரு ஒப்புதல் வாக்குமூலம்

செப்டம்பர் மாதத்திற்கான புதிய தொடர்கள் முறையாக தொடங்கியுள்ளன. உங்கள் ஆதரவிற்கு மனம் நிறைந்த நன்றிகள். அடுத்த தொடர் பற்றிய ஒரு முன்னுரையே இப்பதிவு.

முன்னுரை என்று சொல்வதைவிட தன்னிலை விளக்கம் அல்லது ஒப்புதல் வாக்குமூலம் என்றே சொல்லிவிடுவது சிறப்பு. காரணம் இருக்கிறது. ஏனென்றால் இந்த தொடர் சாதாரணத் தொடர் அல்ல. நெடுந்தொடர்!! ஆமாம் நெடுந்தொடர். நீண்ட நெடிய விவாதங்களுக்குப் பிறகு, நீண்ட ஆலோசனைகள், அறிவுரைகளுக்குப் பிறகு, ஒரு வழியாக ஒரு நாவல் எழுதத் திட்டம்.

பொறுத்தருள்க. இது என் முதல் நாவல். மீண்டும் பொறுத்தருள்க. இதை முதல் நாவலுக்கான முயற்சியாகக் கூட கொள்ளலாம். ஓரளவு தமிழ் புத்தகங்களைப் படித்தவன் என்கிற முறையில் நான் இதைத் தொடங்கவில்லை.

தாக்கங்கள் என்னைத் தூண்டின. இரண்டு தாக்கங்கள்தான் என்னை இதை எழுது என உந்தித் தள்ளின. ஒன்று. பெண்களை நம் சமூகம் எந்த பார்வையில் நோக்குகிறது? சரியான இடம் அவர்களுக்கு இருக்கிறதா? நம் சமூகத்தில் தவறு என்பதற்கான வரையறை என்ன? எதையெல்லாம் தவறெனக் காட்டுகிறார்கள்? இதையெல்லாம் தாண்டி சமூகத்தின் மதிப்பீடு குறித்த ஒரு பார்வையாக, பரிணாமமாக என்னவெல்லாம் இருக்கிறது?

இரண்டாவதாக ஒரு ஆங்கிலப்படத்தின் ஆய்வு என்னுள் ஏற்படுத்திய வலியைச் சொல்லலாம். அவ்வளவுதான் எழுத வேண்டும் என தீர்மானித்து விட்டேன். தவிர இது உங்களுக்கெல்லாம் பிடிக்குமா? என்றெல்லாம் அறிகிலம். எந்த எழுத்தாளரையும் உள்வாங்காமல் எழுத வேண்டும் என்றுமட்டும் தீர்மானித்திருக்கிறேன். எந்தளவு சாத்தியமோ தெரியவில்லை. ஒவ்வொரு கதாபாத்திரமாக என்னுள் பிறக்கிறார்கள். பேசுகிறார்கள். நான் எழுதுகிறேன். அவ்வளவுதான்.

மேற்கண்ட பத்தியில் ஏதாவது அதிமேதாவித்தனம் இருப்பதாய் தோன்றினால் பொறுத்தருள்க. இந்த நாவலைப் படிப்பதற்கென்று சில வழிமுறைகள் உள்ளன. அதாவது ஏதாவது லாஜிக் குறைபாடுகள் தோன்றினால் உடனே உங்கள் மனதில் “மடையன், என்னமோ கிறுக்குகிறான்” என எண்ணாமல், முதல் முயற்சி இது என எண்ணுங்கள். தவறுகளை உடனே சுட்டிக்காட்டுங்கள். நடையில் பிரச்சினை இருந்தால் வழிகாட்டுங்கள்.

முக்கியமாக கதையின் போக்கு குறித்து நீங்கள் ஏதாவது தெரிவிக்க விரும்பினால் உடனே commentங்கள். (அப்போதுதான் அடுத்த அத்தியாயத்தில் அதை மாற்றி வேறுவிதமாக எழுதி உங்கள் எதிர்பார்ப்பை பொய்யாக்க முடியும்!!)

கதையின் பெயர் கோவர்த்தனன் என்று வைத்துள்ளேன். சில அத்தியாயங்களுக்குப் பிறகுதான் தலைப்பின் நோக்கு ஓரளவு விளங்கக்கூடும் (என்று நினைக்கிறேன்!). அத்தியாயங்களுக்கு பெயர் சூட்டும் எண்ணமில்லை. உங்களுக்கு ஏதேனும் பெயர் பொருத்தமாக இருப்பதாய் தோன்றினால் மறுமொழியிடுங்கள்.

முதல் அத்தியாயம் விரைவில் வெளிவரும். அதன் தொடர்ச்சியாக 15-20 நாட்களுக்குள் அடுத்த அத்தியாயம் வரும். முதல் அத்தியாயம் மட்டும் ‘கொஞ்சம் பெரிதாக’ வந்துவிட்டது. பிற அத்தியாயங்கள் சிறியனவாக இருக்கும்(!). கதையின் தொடக்கத்தை தீர்மானித்து விட்டேன். முடிவும் கிட்டதட்ட தயார். ஆனால் இடைப்பகுதி மட்டும் மனம் போன போக்கில்தான். பொறுத்தருளவும். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் இது உங்களுக்கு புதிய அனுபவம்தான்! ஏனென்றால் அதிக பிரபலமில்லாத ஒருவன் முதல் நாவலை எழுத முயற்சிக்கிறான். அதில் உங்கள் பங்களிப்பும் இருக்கப் போகிறது. இந்த முயற்சி தோல்வியடைந்தாலும் கவலை இல்லை. அப்படியானால் ஒரு நாவலை எப்படியெல்லாம் சிதைக்கக் கூடாது என கற்றுக் கொள்வேன். வெற்றி பெற்றால் மகிழ்ச்சிதான்!

பரவசத்திற்கோ, பாயாசத்திற்கோ. எதற்கும் தயாராக இருங்கள்.

எதிர்பார்த்து,

தமிழ்.

Advertisements

6 thoughts on “ஒரு ஒப்புதல் வாக்குமூலம்

  1. தமிழா, உன் வெற்றிக்கு என் வாழ்த்துக்கள். ‘சேர்ந்து கலக்குவோம்’ என்று நீ சொன்னது தான் உந்தன் தனி சிறப்பு. உன்னிடம் நிறைய எதிற்பார்கிறேன்….. உன்னை எழுத தூண்டிய கரணங்கள் அழகு. அதுபோலவே உன் எழுதும் அமையட்டும்.

    நாற்சந்தி ‘ஓஜஸ்’

மறுமொழியிட

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s