டெமுஜின் கதை (புதிய தொடர்)

கூடாரத்தின் வெளியே யெசுகெய் பரபரக்கிறார். உள்ளே ஹோலுன் அமர்ந்திருக்கிறாள். அவளுக்குப் பிரசவ வலி ஆரம்பித்திருந்தது. அதுவும் தலைப்பிரசவம். அவள் வலியால் துடித்துக் கொண்டிருந்தாள்.

போதும். காரணங்களே சொல்லாமல் 5 வரிகள். இது ஒரு கதை. வெறும் கதையல்ல. வீரக் கதை. அதிகம் அறியப்படாத ஒரு மாவீரரின் கதை. அதை தொடங்கும் முன் மற்றொரு முன் கதையையும், அதாவது கதை பிறந்த கதையையும் அறிந்தால்தான் சுவாரசியமாயிருக்கும்.

எந்த மின்ணனு சாதனம் புதிதாக வாங்கினாலும் முடிந்த மட்டும் பெயர் வைப்பது என் வழக்கம். அலைபேசியாகட்டும், பென்-ட்ரைவாகட்டும் எப்படியாவது பிடித்த வித்தியாசமான பெயர்களை சூட்டுவது பிடித்தமான காரியம். இவ்வளவு சொன்னேனே, என் மடிகணினி (லேப்டாப்) யை விட்டு விட்டேன் பார்த்தீர்களா?

அதற்கும் ஒரு பயனர் (User) பெயர் வைத்தேன். வேறொன்றுமில்லை. ’டெமுஜின்’ (Temujin) என்று. என் தம்பியைத் தவிர வேறு யாராலும் அந்த வார்த்தையை / பெயரைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

செங்கிஸ்கான் என்கிற பெயரில் வரலாற்றில் பதிந்திருக்கிற அந்த வீரரின் இயற்பெயர்தான் டெமுஜின். இப்படி எடுத்து சொன்னாலும், சிலர் என்னை மேலும்-கீழும் பார்த்தனர். போதாதற்கு ஒரு திரைப்பாடலில்

‘நீ செங்கிஸ்கானா?

இனி உன் கிஸ் தானா?

என்றெல்லாம் இருந்தபடியால், எக்கச்சக்க எரிச்சலுள் என் மனம் தவித்தது. ஓரளவு நன்பர்களிடத்தில் இந்த பெயர் ’பிரபலம்’ ஆனாலும் எனக்குள் ஒரு விட்ட குறை-தொட்ட குறை அழுத்திக் கொண்டேயிருந்தது. அதைப் போக்கத்தான் இந்த புதிய தொடர்.

## உலகையே கட்டியாளப் போகிறேன் என்று கிளம்பியவர்களின் வரிசையில் – அதில் வென்றவர்களின் வரிசையில் மங்கோலியப் பேரரசர் செங்கிஸ்கான் முதன்மையானவர்.

ஒரு சில ஆச்சர்யங்கள் மட்டும் இப்போது.

  • இன்று, ஐரோப்பா மற்றும் ஆசியாவில் வாழும் இருநூறில் ஒருவர் செங்கிஸ்கானின் பரம்பரையைச் சார்ந்தவர்கள். (2003-ல் வெளிவந்த ஒரு மருத்துவ ஆராய்ச்சிக் கட்டுரையிலிருந்து.)
  • மாவீரர் அலெக்ஸாண்டரின் பேரரசை விட நான்கு மடங்கு பெரியது செங்கிஸ்கானின் மங்கோலியப் பேரரசு.
  • செங்கிஸ்கான் இறந்து ஒரு நூற்றாண்டு வரையில் அவருடைய சந்ததியினர்தான் உலகின் பெரும்பகுதிகளை ஆண்டு வந்தனர்.

இப்போது, மீண்டும் கதைக்குள் போவோம்.

ஹோலுன் பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டிருக்கிறாள். அவளுக்கு உதவியாக ஒரு மருத்துவச்சி கூடரத்துள் இருக்கிறாள். வெளியே பரபரக்கிறார் யெசுகெய். அவர் போர்கிஜின் என்ற இனக்குழுவின் தலைவர்.

மங்கோலியா என்கிற தேசமே அப்போது இல்லை. எனவே மங்கோலியர் எனுமாறு ஒரு இனமே இல்லை. வெவ்வேறு இனக்குழுக்கள்தாம் அப்போது ஒவ்வொரு சிறுசிறு பகுதிகளையும் தங்கள் ஆளுகைக்குள் வைத்திருந்தனர். அவ்வப்போது சிறு போர்களும் நிகழ்ந்து நிலத்தைக் கைப்பற்றும் சண்டைகளும் நிகழ்ந்த காலம் அது.

கூடாரத்திற்கு இப்போது ஒரு மந்திரவாதி வந்தார். யெசுகெய் அவரை வணங்கினார். அப்போது ஹோலுனின் உச்சபட்ச அலறல் கேட்டது. உடன் குழந்தை ஒன்றின் அழுகுரலும்!

மருத்துவச்சி கூறினாள். ”ஆண்குழந்தை”.

யெசுகெய் வானம் நோக்கினார். விண்மீன்கள் மின்னின. தன் வலது கையை மார்பின் இடப்புறம் வைத்து குனிந்து ஒன்பது வணங்கினார். மங்கோலியர் வழக்கப்படி அது கடவுளுக்கு நன்றி செலுத்தும் முறை.

கூடார வாசலில் அம்பு ஒன்றை செருகி, அதில் வில்லைத் தொங்கவிட்டார் மந்திரவாதி. தீய சக்திகளை விரட்டும் வழிதான் அது.

யெசுகெய் குழந்தையின் கைகளைத் திறந்து பார்த்தார். உள்ளங்கையில் ரத்தம் கட்டியிருந்தது. ஹோலுன் திடுக்கிட்டாள். மந்திரவாதியிடம் இது பற்றி கேட்டனர். அவர் பிரகாசமடைந்து,

“இது சாதாரணக் குழந்தையில்லை. இவ்வுலகையே வீரத்தால் வெல்லக் கூடியவன். பேரரசன்”

என்றார். மேலும் என்ன பெயர் வைக்கப் போகிறீர்கள்? எனவும் கேட்டார் மந்திரவாதி.

சட்டென யெசுகெய்யிடம் பதில் வந்தது. காரணம் மந்திரவாதியின் ஆருடம்.

யெசுகெய்யின் பதில் இதுதான்.

டெமுஜின்.

டெமுஜின் என்றால் இரும்பு மனிதன் என்று பொருள்.

செங்கிஸ்கான் குறித்து தமிழில் நூல்கள் மிகக் குறைவு. அவரின் புகைப்படம் கூட இணையத்தில் இல்லை. ஒவியமாகவே கிடைக்கிறது. பலரும் அவரை அறிந்து கொள்ள வேண்டியே இத்தொடர். கலாச்சார ரீதியாகவும்-வரலாற்றுத் தேடலாகவும் இத்தொடர் பலவற்றைக் கற்றுக் கொடுக்கும் என நம்புகிறேன். வாருங்கள் கற்கலாம்.

-ஆரம்பம்.

One thought on “டெமுஜின் கதை (புதிய தொடர்)

மறுமொழியிட

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s