பெயருக்குப் பின்னே அமைதி-2

முருகன் என்றால் அழகு என்றும் பொருள். ஒரு வேளை அழகான குழந்தைதான் பிறக்கும் என்கிற நம்பிக்கை பெற்றோர்களுக்கு அதிகம் இருந்திருக்குமோ, இல்லையோ தெரியாது. இல்லாவிட்டால் தாய்க்கு தன் பிள்ளை அழகுஎன்ற கருத்தளவோ தெரியாது. எது எப்படியிருந்தாலும் ’தமிழ்க்கடவுள்’ எனப்படுகிற முருகனின் வழிபாட்டுத் தாக்கம் முந்தைய தமிழ்ச் சமூகத்தில் பெருமளவு இருந்ததை எளிதாக உணரமுடிகிறது. ஏராளமான செந்தில்களும், முருகானந்தன்களும் சுப்பிரமணியன்களும் போன தலைமுறையில் இருந்தார்கள். சைவ, வைணவப் பெயர்களுக்குள் போனால் இன்னும் தலை சுற்றும்.
20-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் தமிழின் பெருமை-அடையாளம்-உரிமைக்காக இருந்த தனித்தமிழ் இயக்கம் முதலியவற்றின் காரணமாய் பெயர்களில் இருந்த வடசொற்கள் நீக்கம் செய்யப்பட்டன. ஆனாலும் உலகம் உருண்டையல்லவா? தற்போது வடசொற்களையும், எழுத்துகளையும் பெயர்களோடு இணைத்துக்கொள்வது ஃபேஷனாகிவிட்டது. இப்போதெல்லாம் பெரும்பாலான பெயர்களில் ஷ்-ம், ஸ்ரீ-யும் இடம்பெறுகின்றன.
தனித்தமிழ்ப் பெயர்களைத் தவிர்த்துப் பார்த்தால், சென்ற நூற்றாண்டில் தமிழர்களுக்கு அறிமுகமான அயல்நாட்டுச் சிந்தனையாளர்களாலும். தலைவர்களாலும் தாக்கம் பெற்று அவர்கலின் பெயர்களை (மட்டும்!) சூட்டிக்கொண்டனர் (பெயர்களை மட்டும்!). இதில் இந்திய சுதந்திரப்போராட்டமும் விதிவிலக்கல்ல. காந்திகளும், நேருக்களும், நேதாஜிக்களும், திலகர்களும் பலவாறு தமிழகத்தில் பரவியிருந்தனர். இன்றைய காலத்தில் அவர்களுக்கு 50-க்கு மேல் வயதாகியிருக்கலாம். அந்தப் பெயர்களெல்லாம் இப்போது பரவலாக இல்லை. இனி யாராவது ’அண்ணா ஹசாரே’ பெயரை வைக்கலாம்!

 

இந்தப் பெயர்ப்பட்டியல்களில் பாரதி’ யின் பெயர் மிகுந்த தாக்கம் பெற்றுள்ளது. ஆண்-பெண் வித்தியாசமின்றி ’பாரதி’ என்கிற பெயர் பரவலாக வைக்கப்பட்டுள்ளது. வங்காளி என்கிற போதிலும் தாகூருக்கும் அதேஅளவு அபிமானம் இருக்கிறது. இருந்தபோதிலும் தமிழர்கள் இந்த இரு மகாகவிஞர்கள் அளவிற்கு வேறு எந்த கவிஞர்களையும் கொண்டாடவில்லை என்பதும் உண்மை.

தம் குழந்தைகளுக்கு தமிழர்கள் சூட்டும் பெயர்கள் காலத்தை பிரதிபலிப்பதுடன், தங்கள் சொந்த ஆசைகளையும், கொள்கைகளையும் சுட்டிக்காட்டுவதாக அமைகின்றன.தங்கள் குழந்தைகளுக்குப் பெயர்சூட்டுவதில் தமிழர்களைப்போல் தனித்துவம் கொண்டவர்கள், புரட்சிகரமானவர்கள் அநேகமாக உலகிலேயே இல்லை எனலாம். ஆனாலும் பெயர்கள் வைப்பதில் 1940-1980 வரை காட்டப்பட்ட புரட்சிகரமான அணுகுமுறையும் மாறிவருகிறது.

தந்தை பெரியாரின் சுயமரியாதை-பகுத்தறிவு இயக்கத்தால் கவரப்பட்ட பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் குழந்தைகளுக்கு ஜாதக அடிப்படையில் அல்லாமல் தங்களுக்குப் பிடித்தமான தலைவர்கள், சிந்தனையாளர்கள், மற்றும் புரட்சிகரமான பெயர்களையும் வைத்தனர்.
திராவிடர் கழகம் மக்கள் இயக்கமாக மாறிக்கொண்டிருந்த நேரத்தில் தமிழர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ்ப்பெயர் சூட்டி மகிழ்ந்தனர். ஆனாலும் சில விதிவிலக்குகள் உண்டு. மார்க்ஸ், ஸ்டாலின், எமர்சன், ரூஸோ, பிராட்லா, சாக்ரடீஸ் போன்ற பெயர்களைச் சூட்டிக்கொள்ள தடையேதுமில்லை. அந்த அடிப்படையில் பெரியாரும் புத்தன், சித்தார்த்தன் போன்ற பெயர்களையும் சூட்டியிருக்கிறார். நாரயணசாமி நெடுஞ்செழியனாக, ராமய்யா அன்பழகனாக, சாரங்கபாணி வீரமணியாக மாறினார்கள். அந்த உணர்வு வேகமாக வளர்ந்து பாவாணர், பெருஞ்சித்திரனார் போன்றவர்கள் தூய தமிழ்ப்பெயரைச் சூட்டுவதை வளர்த்தெடுத்தார்கள்.

“மொழி என்பது போர்க்கருவியைப் போல. அது காலத்திற்கேற்ப புதுமையாக வேண்டும். மாற்றங்களை ஏற்று வளர வேண்டும்”

என்பது பெரியாரின் வாக்கு.

பெரியாரியம், கம்யூனிசம் முதலானவற்றின் தாக்கத்தால் தமிழகத்தில் ஏராளமான கார்ல் மார்க்ஸ்களை, லெனின்களை, ஸ்டாலின்களை பார்க்கமுடியும். இப்போது தடுக்கி விழுந்தால் சேகுவேரா மீதுதான் விழவேண்டும்.

-தொடரும்.

Advertisements

மறுமொழியிட

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s