மழையில் கரைந்த வரிகள்!

ஈரெழுத்தில் கவிதையெழுது என என்னிடம் சொன்னால் மழை! என்றுதான் சொல்வேன். (என்னிடம் இதை சாக்காக கொண்டு கவிதை ப்ளீஸ்-னு யாரும் வர வேண்டாம்!!) சில தினங்களுக்கு முன் தமிழகத்தில் பரவலாகவே மழை பொழிந்து வந்தது. இப்பதிவு எழுதுகிறபோது வெயில் உக்கிரம் காட்டுவது வேறு! என்னதான் வெயில் பாடாய் படுத்தினாலும் மழை தருகிற மகிழ்ச்சியில் எல்லாமே கரைந்துவிடும்.

மழை மட்டும் இல்லையேல் என்னாகும் வாழ்வு!

வெயில் யாருக்கும் நன்மை பயக்காமல் போவதில்லை. நாம் உயிர்வாழ மழை எந்தளவு அவசியமோ, அதே அளவு வெயிலும் முக்கியம்தான். இன்னும் சொல்லப்போனால் மழையின் மூலத்துள் ஒன்று வெயில். வெயில் அடிப்பதன் காரணமாய்தான் மழை பொழிகிறது.
காசி ஆனந்தன் குறும்பா ஒன்று.

அள்ளிக் கொடுப்பதோ பூமி.
பேர் எடுப்பதோ வானம்.

இதுவும் மழை குறித்துதான். மழைக்கு ஆயிரம் அறிவியல் நுட்பங்கள் சொல்லலாம். ஆனால் பள்ளி காலத்தில் இருந்த ஒரு சுவையான பகிர்வு இதோ.
அதாகப்பட்டது,இராவணனால் கடத்தப்பட்ட சீதையைக் காண வேண்டி இராமன் வில் எய்த அம்பை எடுக்கிறார் (மின்னல்!). எய்கிறார். பலத்த சப்தம் (இடி!). சீதை திரும்பாததை எண்ணி அழத் துவங்குகிறார் (அதுதான் மழை!).

வள்ளுவரும் மழை குறித்த பல குறள்களை எழுதியிருக்கிறார். அவரும் மழையை ‘வான் சிறப்பாக’வே பாவிக்கிறார். ஊரில் ஒரே ஒரு நல்லவனுக்காக மொத்த ஊருக்குமே மழை பெய்யும் என்கிறார்.இன்னும் இன்னும் என்னன்னவோ!

மழையை மையப்படுத்தி ஏராளமான திரைப்பாடல்கள் வந்துள்ளன. வெயிலை மையப்படுத்தி குறைவுதான். மழை பலருக்கு மகிழ்ச்சியைத் தருகிறது; கவிதையைத் தருகிறது; குளிர்ச்சியைத் தருகிறது. இன்னும் பலருக்கோ பெரும் எரிச்சலைத் தரும்(!).

மழையில் நனையவே கூடாது என்றெல்லாம் பெரும்பாலான வீடுகளில் கட்டளையிட்டு விடுகிறார்கள். என் வீட்டிலும் தான். ஒரே ஒரு முறை விருப்பப்பட்டு நனைந்துள்ளேன். பள்ளிகாலங்களில் சைக்கிளில் , மழையில் தொப்பலாக நனைந்து வருவதுண்டு! ஒரு திரைப்படப் பாடலில் கவிஞர் இப்படி எழுதுகிறார்.

மழை கவிதை கொண்டுவருது! யாரும் கதவடைக்க வேண்டாம்!
ஒரு கருப்பு கொடி காட்டி யாரும் குடை பிடிக்க வேண்டாம்!
இது தேவதையின் பரிசு! யாரும் திரும்பிக் கொள்ள வேண்டாம்!
நெடுஞ்சாலையிலே நனைய ஒருவர் சம்மதமும் வேண்டாம்!

இனிதான் முக்கியமான கருத்தை நமக்கு சொல்கிறார்.

அந்த மேகம் சுரந்த பாடு – ஏன் நனைய மறுக்கிறாய்?
நீ வாழ வந்த வாழ்வில் ஒரு பகுதி இழக்கிறாய்!
நீ கண்கள் மூடி கரையும்போது மண்ணில் சொர்க்கம் ஏதுவாய்!

சிலருக்கோ மழை பொழியும்போது தேநீர் அருந்தினால் சுகம். ஆக மொத்தத்தில் மழை பலருக்கும் நன்மை பயக்கிறது. உங்களால் மழையில் நனைய விருப்பமில்லாவிட்டாலோ, வயது அனுமதிக்காவிட்டாலோ கவலை வேண்டாம். அதற்கும் ஒரு வழி இருக்கிறது. சன்னல் வழியே மழையின் தோற்றம் கண்டு சிலிர்க்கலாம். இயற்கையை , மழையை ரசிப்பதை விட இந்த தருணத்தில் வேறென்ன இன்பம் இருந்து விடப் போகிறது. மேலே குறிப்பிட்ட பாடல் ‘என் சுவாசக் காற்றே’ எனும் திரைப்படத்தில் ”ஒரு துளி” எனும் பாடலில் இருந்த இறுதிவரிகள். இது போன்ற மழைப்பாடல்களைக் கேட்டு இன்புறுங்கள்.

எல்லோரும் இன்புற்றிருக்கவே யன்றி வேறேது அறிவேன்!

இப்பதிவு எழுதியபோது வெயில் ரணம் செய்தது. இதை பதிப்பிக்கையில் மழை வந்து ஆனந்தம் செய்தது. அதுதான் மழை! இது எனது 25-வது பதிவு. தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி.

Advertisements

2 thoughts on “மழையில் கரைந்த வரிகள்!

  1. “தமிழரசுவின் 25ஆவது பதிவுக்கு மழை தன் வரவேற்பு மற்றும் வாழ்த்துகளை பதிவு செய்கிறது இடியுடன்” என்று இரண்டு மணி நேரத்துக்கு முன் ட்விட்டர்ல கீச்சினேன். இப்ப பார்த்தால் மலைக்க வைக்கும் மழை பதிவு. மழை போல படிக்க படிக்க மகழ்ச்சி தரும் உணர்வுகள்.கவிதை, முரண், உணர்வு, உண்மை என நல்ல கலவை.

    வாழ்த்துகள் நண்ப. உன் தமிழ் பணி மேலும் தொடரட்டும்.

    என்றும் அன்புடன்,
    நாற்சந்திஓஜஸ்

மறுமொழியிட

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s