பெயருக்கு பின்னே அமைதி-1

பெயரில் என்ன இருக்கிறது?

ரோஜாவை எந்தப் பெயரில் அழைத்தாலும் அதே நறுமணம்தான்

                                                                                                                            –ஷேக்ஸ்பியர்

ரோஜாவின் விஷயத்தில் அது உண்மையாக இருக்கலாம், ஆனால் மனிதர்களுக்கு அப்படியல்ல.

இந்த உலகம் தோன்றிய காலத்தில் யாருக்கும் பெயர் குறித்த தேவை எழுந்ததில்லை. ஆணென்றும்,பெண்ணென்றுமே அனைவரும் அடையாளம் காணப்பட்டிருப்பார்கள். ஆனால் அன்று போல் நிலைமை இன்றில்லை. குழந்தை பிறந்ததுமே என்ன பெயர் வைப்பதென   பெரும் விவாதங்களே குடும்பங்களுக்குள் நடக்கின்ற சூழல் தீவிரமடைந்து வருகிறது.

[சிறுகதை ஒன்றில் பிரசவத்திற்காக அனுமதிக்கப் பட்டிருக்கும் ஒரு பெண் ஆண் குழந்தைக்காக  ஏங்குவது போலவும், பாலாஜி என்று பெயர் சூட்டி திருப்பதியில் மொட்டை போட திட்டமிட்டபடியும் கதை செல்லும்.]

கிட்டத்தட்ட பெயர் வைப்பது ஒரு சடங்காகவே உருவாகிவிட்டது. தந்தைக்கும்,தாய்க்கும் குழந்தை பிறந்ததும் பெயர்  வைப்பது ஒரு நிகழ்வாக மாறிவிட்டது.என்ன பெயர்  வைப்பது என்பது குடும்பங்களில் கௌரவப் பிரச்சனையாகவோ, உறவினர்களுக்குள் பெரும்பூசலாகவோ உருவெடுக்க வழி செய்கிறது.

ஒரு குழந்தைக்கு ௧௦ (10) பெயர்களைத் தேர்வுசெய்து கிட்டத்தட்ட பட்டிமன்றங்கள் அளவுக்கு விவாதங்களை நடத்தி, அனைத்து குடும்ப உறுப்பினர்களையும் சரிக்கட்டுவதற்குள் ? ஸ்ஸ்ஸ்! அப்பாடா!! என்றாகிவிடும்.உண்மைதானே!

இதே நிகழ்வுகளை சில ஆண்டுகள் முன்சென்று பார்க்கலாம்.என் உடன் படித்த மாணவர்களில் சரவணன் என்கிற பெயரில் அமைந்தவர்கள் அதிகம். பத்தாம் வகுப்பில் மூன்று சரவணன்கள் இருந்தார்கள்.முன்னெழுத்து (இனிஷியல் ) வித்தியாசமாக இருந்ததால் தீர்ந்தது கதை. இல்லாவிட்டால்…!

இன்றைக்கு பெரும்பாலும் கார்த்திகேயன்கள்  ‘கார்த்திக்’-காக சுருங்கிவிட்டார்கள். ராசேந்திரன்கள் ‘ராஜ் ‘-ஆக சுருங்கி புதிதாக நவீன்களும் , ராகுல்களும் உருவாகி விட்டார்கள்.

குமரன் என்பது நல்ல தமிழ்ப்பெயர்தான் என்றாலும் ‘குமார் ‘-ஆக மாறிப் பெருகிவிட்டது. 

சரி பெயர்களில் என்ன இருக்கிறது என்கிறீர்களா? பத்தாண்டுகளுக்கு முன்சென்றதிலேயே  தலை சுற்றவைக்கும் புள்ளிவிவரங்களைத் தரமுடிகிறது என்றால் போன நூற்றாண்டுக்குப் போனால்? ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்சென்றால்?

கொஞ்சம் விரிவாகவே சொல்வதென்றால் தமிழர்களின் பெயர்கள் இரண்டாயிரம் ஆண்டு அரசியல்-சமூக வரலாற்றைப் பிரதிபலிக்கும் கண்ணாடிகள். ஓர் பெயரைக் கேட்டவுடனேயே அந்தப் பெயரின் மொழி, இனம், நாடு என்ற மூன்றின் குறியீடாக அப்பெயர் விளங்குவதை உணர முடியும்.

பெயர்கள் சொல்லும் கதைகள் நிச்சயம் உங்களுக்கு உவப்பூட்டும்.வியப்பூட்டும்.ஒன்றை மறந்து விடாதீர்கள் .

பெயர்கள்வெறும்பெயர்கள்அல்ல.

Advertisements

மறுமொழியிட

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s