சுழல்காற்று நினைவுகள்-2

நினைவுகளை தொடர்கின்றவர்களுக்கு,

வணக்கம். சுழல் காற்று என்று கல்கி பெயரிட்டதாலோ என்னவோ, இப்பகுதியைத் தொட்டவுடனே நண்பர் கொந்தளித்துவிட்டார். அதாகப்பட்டது, ஆழ்வார்க்கடியான் சிறைக்குள் “அடைக்கப் படவில்லை” மாறாக அவனாகவே விரும்பி(அதாவது வந்தியத்தேவனை சந்திக்க) வந்ததாக ஆதாரத்துடன் மின்னஞ்சல் செய்திருந்தார். நன்றிகள். நான் அவ்வாறு குறிப்பிட்டது தொடரின் இறுதியில் ஒரு ‘கிக்’ இருக்கட்டுமே என்ற நப்பாசைதான். போதும் என் கதை. இனி….
அங்கனம் சிறைக்குள் இருந்த வந்தியத்தேவனை ஆழ்வார்க்கடியான் விடுவிக்கின்றான். சேனாதிபதி உத்தரவின் பேரில். அவரோ, மற்றோர் திட்டம் செய்கிறார். அதாவது சோழ நாட்டு முதன் மந்திரி அநிருத்த பிரம்மராயர் ஆழ்வார்க்கடியானிடம் ஒரு ஓலை தந்து அதைப் பொன்னியின் செல்வரிடம் கொடுக்கச் சொல்கிறார். அந்த செய்தி யாதென அறியும்படி வந்தியத்தேவனுக்கு பணிக்கிறார் சேனாதிபதி.
வந்தியத்தேவனும், ஆழ்வார்க்கடியானும், இன்னும் இரு சோழ வீரர்களுமாய், இலங்கையின் வனப்பகுதியுள் காட்டுப்பாதை வழி செல்கின்றனர். சில இடையூறுகளைத் தாண்டி இவர்கள் அனுராதபுரத்திலிருந்து, தம்பள்ளை (இப்போதைய தம்புல்லா) நகருக்கு விரைகின்றனர். எல்லாம் பொன்னியின் செல்வரைக் காண வேண்டிதான்.
ஆனால் வழியில் இவர்கள் ஆதித்த கரிகாலரின் நண்பன் பார்பேந்திரப் பல்லவனைக் காண்கிறார்கள். அவனும் பொன்னியின் செல்வரைத் தேடி வந்த்தாகக் கூறிச் செல்கிறான்.

பொன்னியின் செல்வன் புத்தகத்தின் முதற்பாகம் 57 அத்தியாயங்களைக் கொண்டது. தலைப்பிற்குரியவரான பொன்னியின் செல்வர் இரண்டாம் பாகத்தின் இருபத்தொன்பதாவது அத்தியாயத்தில் அறிமுகமாகிறார். வந்தியத்தேவனும், ஆழ்வார்க்கடியானும் தம்பள்ளை நகரை அடைகின்றனர். அங்கே நகரம் விழாக்கோலம் பூண்டிருக்கிறது. இலங்கை என்பது அன்றிலிருந்து இன்றுவரை பௌத்த தேசமாயிருக்கிறது. எங்கெங்கும் புத்தசிலைகள் பற்றிய குறிப்புகளும் நூலில் இருக்கின்றன. தம்பள்ளையிலிருந்து சில தூரம் தள்ளி சிம்மகிரி நகரம் இருக்கிறது. தம்பள்ளை வரை சோழர் கண்காணிப்பில் இருக்கிறது. சிம்மகிரியில் அப்போதைய இலங்கை அரசன் மகிந்தன் தலைமறைவாயிருப்பதால் பொன்னியின் செல்வர் பெரும்பாலும் தம்பள்ளையில் இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையில் இருவரும் செல்கின்றனர். வழியில் விழாக்கோலம் பற்றி விசாரிக்கையில் சீன யாத்ரீகர்கள் இருவர் சிம்மகிரியிலிருந்து வருவதாய் தகவல் வருகிறது. இருட்டாகிவிட்டபடியால் தம்பள்ளையிலே இருவரும் இருக்கின்றனர். இந்நிலையில் சீனப் பயணிகள் இருவரும் யானையில் நகருக்குள் வருகின்றனர்.இதற்கிடையே அந்த யானையின் பாகன் இவர்கள் இருவரையும் உற்றுப் பார்த்தபடி சற்று தூரத்தில் மறைந்துவிடுகிறான். சற்று நேரத்தில் ஒரு சோழ வீரன் இருவரையும் சோதித்து பிறகு ஒரு பாழும் மண்டபத்திற்கு அழைத்துச் செல்கிறான்.அங்கே இரு குதிரைகள் மட்டும் கட்டப்பட்டிருக்கின்றன. குதிரைகள் இரண்டுதான் என்பதால் வந்தியத்தேவன் கலக்கமுறுகிறான். காரணம் யானைப் பாகனாய் வந்தது பொன்னியின் செல்வர்தான். ஆகவே அவரை எப்படியாவது பார்த்துவிட வேண்டும். ஓலையைச் சேர்க்க வேண்டும் எனும் எண்ணம் மேலோங்குகிறது. இதன் காரணமாய் அழைத்து வந்த சோழ வீரனை அடித்து அவன் குதிரையைப் பற்றி விரட்டுகிறான். அவனுக்கு முன் ஆழ்வார்க்கடியான் குதிரையில் சென்று கொண்டிருந்தான். இவர்கள் சோழ சைன்யத்தை (போர்ப் படையை) அடைந்த போது பின்னாலே அடிபட்ட சோழ வீரன் ஓடோடி வந்தான். அதுசமயம் திடீரென முன்னாலிருந்து வந்த சோழ வீரன் ஒருவன் வந்தியத்தேவனித் தாக்கி நிலைகுலைய வைக்கிறான். மற்றோர் வீரன் வந்தியத்தேவனின் உடைவாளை பிடுங்கிக் கொண்டான். சினமுற்ற வந்தியத்தேவன் தன்னைத் தாக்கிய வீரனோடு முரட்டுத்தனமாய் சண்டைபிடிக்கிறான். இறுதியில் அவ்வீரன் வந்தியத்தேவனிடமிருந்த ஓலையைக் கைப்பற்றுகிறான். அவன் சைகை செய்தவுடன் சில வீரர்கள் வல்லவரையனை நகரவிடாது செய்கின்றனர். ஓலையைத் திரும்பப் பெற வல்லவரையன் செய்யும் முயற்சிகள் கைகூடவில்லை. ஆத்திரத்தில் ஆழ்வார்க்கடியானைப் பழிக்கிறான் அவன். “நீயாவது தடுத்து ஓலையைப் பிடுங்கியிருக்கலாமே” என்கிறான். ஆழ்வார்க்கடியானோ, ஓலை சரியான நபரிடத்து சென்று சேர்ந்துள்ளது என்கிறான்.

ஆம். அது பொன்னியின் செல்வர்தான். இப்படி அவரை அறிமுகம் செய்தமைக்காக கல்கியே நம்மிடம் மன்னிக்க வேண்டுகிறார். நானும் பொறுத்தருள வேண்டுகிறேன்.இப்பதிவைச் சாக்காக கொண்டு வரலாறு போற்றும் மாவீரரை ஒருமையில் சில வரிகள் எழுதிவிட்டேன். எப்படியோ பொன்னியின் செல்வர் அறிமுகமாகி விட்டார்.
அவர் அடுத்து என்ன முடிவுகளை எடுக்கப் போகிறார், என்பதெல்லாம் அடுத்த பதிவில்.
-நினைவுகள் அழியாது

Advertisements

One thought on “சுழல்காற்று நினைவுகள்-2

மறுமொழியிட

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s