சுழல் காற்று நினைவுகள்-1

அழியாத நினைவுகளுக்காய் காத்திருந்தவர்களுக்கு,

இதுவரை புது வெள்ளம் பற்றிய எனது கருத்தோட்டங்களைத் தந்தேன். சிலருக்கு அதிருப்தி இருக்கலாம். பொறுத்தருள வேண்டுகிறேன். இனி முடிந்தமட்டும் சிறப்பாக எழுத முயற்சிக்கிறேன். முதல் பாகம் சில கதை மாந்தர்களின் அறிமுகத்தோடும், ஆதித்த கரிகாலர் அனுப்பிய ஓலையை சுந்தர சோழரிடமும், இளைய பிராட்டி குந்தவையிடமும் வல்லவரையன் வந்தியத்தேவன் எங்கனம் சேர்க்கிறான் என்பதேயாகும். கதை இத்தோடு முடியவில்லை.
ஆதித்த கரிகாலர் நந்தினி பற்றிய சில தகவல்களை பார்பேந்திரனிடம் பகிர்கிறார். குந்தவைதேவி வந்தியத்தேவனிடம் மற்றுமோர் ஓலையை பொன்னியின் செல்வர்(அருள்மொழி வர்மர்)-இடம் சேர்க்குமாறு பணிக்கிறார். இத்தோடு முதல் பாகம் முற்றிற்று.

இரண்டாம் பாகம் (சுழல் காற்று) பூங்குழலி எனும் கதாபாத்திர அறிமுகத்தோடு துவங்குகிறது. முதல் பாகம் வீராணத்து கரையில் துவங்கியது. இப்பாகம் கோடியக்கரையில் துவங்குகிறது. இந்நேரம் பழையாறையில் துவங்கிய வந்தியத்தேவன் பயணம் கோடியக்கரையில் முடிகிறது. அவன் ஈழம் செல்ல வேண்டும். பொன்னியின் செல்வர் ஈழத்தில் போரில் இருக்கிறார். வந்தியத்தேவன் உடன் ஒரு வைத்தியர் மகனை அழைத்து வருகிறான்.
பூங்குழலி என்பவள் சேந்தன் அமுதனின் முறைப்பெண்தான். பல்வேறு காரணிகளால் வந்தியத்தேவன் பழுவேட்டரையர்களால் துரத்தப்படுகிறான். கோடியக்கரையில் வந்தியத்தேவன் பூங்குழலியால் “நயவஞ்சகமாக” காப்பாற்றப்படுகிறான். இதனிடையே வைத்தியர் மகன் பழுவேட்டரையர் ஆட்களிடம் சிக்கி “அப்ரூவராக” மாறி விடுகிறான்.

முதலில் மறுக்கும் பூங்குழலி பிறகு வந்தியத்தேவனை ஈழத்திற்கு கடல் வழி செல்ல உதவ முன்வருகிறாள். அவள் துடுப்பிடுவதில் கில்லாடி (சமுத்திரக் குமாரி)!

இதற்கடுத்தபடியாக ஆழ்வார்க்கடியானின் மறுபிரவேசமும், அநிருத்த பிரம்மராயர் எனும் உண்மைக் கதாபாத்திரமும் நம்மை வியப்பிலாழ்த்தும். பூங்குழலி மூலமாக வந்தியத்தேவன் பெரும் போராட்டத்திற்குப் பின் இலங்கையை வந்தடைகிறான்.

அநிருத்த பிரம்மராயர் சோழ நாட்டின் முதன்மந்திரி. அவர் ஆழ்வார்க்கடியானிடம் ஒரு ஓலையைப் பொன்னியின் செல்வரிடம் சேர்க்கும்படி பணிக்கிறார். ஆழ்வார்க்கடியானும் இலங்கை வந்து சேர்கின்றான்.

இதனிடயே தஞ்சைக் கோட்டையில் உடல்நலம் குன்றியிருக்கும் தன் தந்தை சுந்தரச் சோழரைப் பார்க்க வருகிறார் இளைய பிராட்டி குந்தவைதேவி. அங்கே பழுவூர் ராணி நந்தினிக்கும், இளைய பிராட்டி குந்தவைக்கும் இடையான “பனிப்போரும்”, சுந்தரச் சோழரின் பிரம்மையும் திடுக்கிட வைக்கின்றன.

முன்னம் “அப்ரூவராக” மாறிய வைத்தியர் மகன்தான் ஒற்றன் எனுமாறு செய்தி பரவுகிரது. அதாவது வந்தியத்தேவன் பழுவேட்டரையர் ஆட்களிடம் சிக்கிவிட்டதாக தஞ்சையில் செய்தி பரவுகிறது. குந்தவை தெளிவுடன் இருப்பினும் குழப்பத்தால் வருந்துகிறார். அதைக் கண்டு கொண்ட நந்தினி மகிழ்கிறாள்.(வில்லித்தனம்!!)

இதனிடையே தஞ்சை பாதாளச் சிறையில் அடைபட்டிருக்கும் சேந்தன் அமுதன் குந்தவை தேவியால் விடுவிக்கப்படுகிறான்.

உண்மையில் வல்லவரையன் பழுவேட்டரையர்களிடம் சிக்கவில்லை. கொடும்பாளூர்ப் பெரிய வேளார் பூதி விக்கிரம கேசரியிடம் சிக்கினான். பூதி விக்கிரம கேசரி அப்போது இலங்கையின் சோழ சைன்யத்திற்கு (போர்ப் படைக்கு) படைத்தளபதியாக இருந்தார். அவரிடம் பின்னர் ஆழ்வார்க்கடியானும் சிக்கி சிறை செல்கிறான். இப்போது இருவரும் சிறையில்.இலங்கையில்.

முன்னர் (வந்தியத்தேவனால்) தாக்கப்பட்ட(தாக நம்பிய) கடம்பூர் இளவரசன் கந்தமாறன் நலம் பெற்று , ஆதித்த கரிகாலருக்கு ஓலை கொண்டு போகிறான் நந்தினியின் திட்டத்தின் பேரில்.

இலங்கைச் சிறையில் அடைபட்ட இருவரும் பொன்னியின் செல்வரை எங்கனம் பார்த்தனர், இலங்கையில் பொன்னியின் செல்வர் அறிமுகம் உள்பட இன்னும் ஏராளமான சுவாரசியங்களை உள்ளடக்கியதுதான் சுழல் காற்று பாகம். அத்தனை விஷயங்களையும் நான் ஒரே பதிவில் சொல்லிவிடுவேன் என எதிர்பார்த்தீரா? ம்ஹூம். காத்திருப்பு அவசியமானது. சுகமானது
                                                                                                                                                            – நினைவுகள் அழியாது

3 thoughts on “சுழல் காற்று நினைவுகள்-1

 1. அன்புள்ள தமிழ்,
  பொன்னியின் செல்வனின் ஒவ்வொரு பாகமாக சுருக்கி நீங்கள் எழுதுவதை படிக்கும்போது விரைவில் பொன்னியின் செல்வனை மறுபடி படிக்க ஆரம்பித்து விட வேண்டும் என்று ஆவல் மேலிடுகிறது!
  தமிழ் பதிவர்களுக்கான சந்திப்பு இந்த மாதம் 26 ஆம் தேதி நடக்கவிருக்கிறது. கட்டாயம் வரவும். உங்கள் தோழர் ஒஜஸ் அவர்களுக்கும் தெரியப் படுத்தவும்.
  கீழே உள்ள இணைப்பைப் பார்க்கவும். உங்கள் மற்ற தோழர்களுக்கும் தெரிவிக்கவும்.
  http://ranjaninarayanan.wordpress.com/2012/08/12/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81/

  1. மிக்க நன்றி. ஏதாவது தவறுகள் பதிவில் இருப்பின் உடனே தெரியப்படுத்துங்கள். தொடர்ந்த ஆதரவுக்கு நன்றிகள்.

மறுமொழியிட

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s