மறக்க முடியுமா?

இதை நீங்கள் படிக்கும் நாள் சாதாரணமான நாள் கிடையாது. இந்த நாள் ஒருவேளை உங்களுக்கு மகிழ்ச்சியாகவோ, இல்லாமலோ இருக்கலாம். வரலாற்றில் இது அனாயசமாக கடந்து விடவேண்டிய நாளுமல்ல. ஆனாலும் மற்ற நாட்களைப் போல இதுவும் கடந்து விடுகிறது. ஜப்பானியர்களைத் தவிர. கண்டுபிடித்து விட்டிர்களா?

ஆம். இரண்டாம் உலகப் போரின் உச்சமாய் வரலாற்றில் பதிந்திருக்கும் ஒரு கொடூர சம்பவம் நிகழ்ந்த நாள். இதே நாள் 1945-ல் ஜப்பானில் ஹிரோஷிமாவில் அமெரிக்கப் படைகள் அணுகுண்டு வீசிய நாள்.


இரண்டாம் உலகப் போரில் பல நாடுகள் நாடுபிடி சண்டையில் ஈடுபட்ட நேரம் அது. ஜப்பானும், அமெரிக்காவும் எதிரெதிர் அணியில் இருந்தன. இரண்டாம் உலகமகா யுத்தத்தின் போது ஜப்பான், தானும் ஒரு வல்லரசாக மாறும் முனைப்பில் மிக உக்கிரமாகப் போரில் குதித்திருந்தது. வெற்றிபெற்றுக்கொண்டே வந்த ஜப்பான், பசிபிக் கடல் பிராந்தியத்தின் பேர்ள் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க படைக் கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது. அதன்பின்னரே போரின் போக்கு முற்றாகத் திசைதிரும்பியது. பேர்ள் துறைமுகத்தை ஜப்பான் தாக்கியதால் அதற்கான பதிலடியைக் கொடுக்க ஆயுத்தமானது.

உலக நாடுகள் அதுவரை கேள்விப்பட்டிராத அணுகுண்டு என்கிற புது ஆயுதத்தை அமெரிக்கா பயன்படுத்தத் திட்டமிட்டது. “மான்ஹாட்டன் செயல்திட்டம்” என்பதின் கீழ் உருவாக்கப்பட்ட இரு அணு ஆயுதங்கள் சப்பானின் மீது வீசப்பட்டன. “Little Boy” என்று பெயரிடப்பட்ட அணுகுண்டு ஹிரோஷிமா நகர்மீது 1945, ஆகஸ்ட் 6ஆம் நாளும், ” Fat Man” என்று பெயரிடப்பட்ட அணுகுண்டு நாகசாகி நகர்மீது மூன்று நாட்களுக்குப் பிறகு ஆகஸ்ட் 9ஆம் நாளும் வீசப்பட்டன. நினைத்துப் பார்க்கவும் முடியாத பேரழிவுகளை ஜப்பான் சந்திக்க நேர்ந்தது. அந்த அழிவின் சாட்சியங்கள் இன்றும் அந்த நாட்டில் நிலைத்துள்ளன.
இந்த இரு குண்டுவீச்சுகளின் விளைவு மிகப் பயங்கரமாக இருந்தது. குண்டுகள் வீசப்பட்ட 2-4 மாதங்களுக்குள் ஹிரோஷிமாவில் 90,000-166,000 மக்களும், நாகசாகியில் 60,000-80,000 மக்களும் குண்டுவெடிப்பின் காரணமாக உயிர் இழந்தார்கள். இவ்வாறு உயிர் இழந்தவர்களுள் பாதிப்பேர் இரு நகரங்களிலும் குண்டு வீசப்பட்ட முதல் நாளிலேயே கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹிரோஷிமா நகரின் நலத்துறை கணிப்புப்படி, குண்டுவீச்சு நிகழ்ந்த நாளில் இறந்தோரில் 60% பேர் தீக்காயங்களாலும், 30% பேர் இடிமானங்கள் தங்கள்மேல் விழுந்ததாலும், 10% பிற காரணங்களாலும் கொல்லப்பட்டனர். குண்டுவீச்சைத் தொடர்ந்த மாதங்களில் ஏராளமான மக்கள் தீக்காயங்களின் விளைவாலும், கதிர்வீச்சு நோயாலும், வேறு காயங்களால் நோய் தீவிரமாகியும் இறந்தனர். ஐக்கிய அமெரிக்கா, குண்டுவீச்சைத் தொடர்ந்த சாவுகளுக்கு உடனடியான மற்றும் குறுகிய காலக் காரணங்களைக் கீழ்வருமாறு கணித்தது: 15-20% பேர் கதிர்வீச்சு நோயால் இறந்தனர்; 20-30% தீக்காயங்களால் இறந்தனர்; 50-60% பேர் வேறு காயங்களால் நோய் தீவிரமாகி இறந்தனர். ஹிரோஷிமாவிலும் நாகசாகியிலும் கொல்லப்பட்டவர்களுள் மிகப் பெரும்பான்மையோர் போர்வீரர்கள் அல்ல, சாதாரண குடிமக்களே ஆவர். ஹிரோஷிமாவில் மட்டும் இராணுவ முகாம்கள் பல இருந்தன. இந்தக் குண்டு வீச்சினால் ஏற்பட்ட சாவும் சேதமும் இன்றுவரை துல்லியமாக மதிப்பிட முயன்றும் முடியவில்லை. வரலாறு காணாத சேதாரம் என்று மட்டுமே சொல்ல முடியும்.

1945, ஆகஸ்ட் 15ஆம் நாள், அதாவது, நாகசாகியில் அணுகுண்டு வீசப்பட்ட ஆறாம் நாள், ஜப்பான் போரில் தோல்வியை ஏற்று நேசநாடுகளின் முன் சரணடைந்தது. அதே ஆண்டு, செப்டம்பர் மாதம் ஜப்பான் “சரண் ஆவணத்தில்” (Japanese Instrument of Surrender) கையெழுத்திட்டது. இவ்வாறு இரண்டாம் உலகப் போர் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்தது.
ஆனால் அணு ஆயுதத்திற்கெதிரான போராட்டங்கள் மட்டும் இன்னும் முடிவுக்கு வராமலே இருக்கிறது. படிக்கும் நீங்களாவது ……….

 

வெறுமனே ஒரு நினைவுக்காக இப்பதிவு எழுத வேண்டும் என்று எழுதவில்லை. அமைதிக்கே அணு என்கிற வகையானாலும் சரி, அணுசக்தியே வேண்டாம் என ஒதுங்கினாலும் சரி. அணுஆயுத ஆதரவுக்கு மட்டும் கரம் நீட்டாதீர்கள்.

 

படம்: விக்கிமீடியா

Advertisements

2 thoughts on “மறக்க முடியுமா?

 1. இந்த பதிவில் இன்னும் சேர்க்கப் படவேண்டிய சில விஷயங்கள் :

  1. ஜப்பான் நாட்டின் நீண்ட கால (2500) சரித்திரத்தின் அரிச்சுவடிகளில் இதுவே அவர்களது முதல் (மிகப்) பெரும் தோல்வி மற்றும் வரலாறு காணாத சரணாகதி. அத்தகைய வீரர்கள் அவர்கள்.

  2. இதனால் நானும் நீயும் பாதிக்கப்பட்டவர்கள் என்று சொன்னால் நண்பா, உன்னால் நம்ப முடிகிறதா? முற்றிலும் உண்மை. ‘ஆசாத் இந்’தின் முதுகு எலும்பாக இருந்த வந்தது ஜப்பான் தேசம். இந்த போரினால் தான் அவர்களால், ‘ஆசாத் இந்தின்’ இந்திய படையெடுப்பில் முழுமையாக கலந்து கொள்ள/உதவ முடியவில்லை. நேதாஜி இந்த தோல்வின் காரணத்தால் தான் ஜப்பான் விட்டு வெளியேற முயற்சி/முடிவு செய்து, மடிந்து போனார். ஒருவேளை இது நடவாமல் இருந்து இருந்தால், இந்தியா சீக்கிரம் விடுதலை அடைந்து இருக்கும் என்று கூட சொல்லலாம்.

  இது போல பல அரிய வரலாற்று உண்மைகளை உன் பதிவு நினைவு படுத்துகிறது. மேலும் சிலவற்றை நான் ஒரு பதிவில் எழுதுகிறேன், வெளிச்சத்துக்கு வர வேண்டிய சத்திங்கள் இவை.

  நண்பன்,
  நாற்சந்தி ‘ஓஜஸ்’

  1. நன்றி ஓஜஸ். வரலாறு என்பது ஒருபக்கம் மறைக்கப் பட்டதாயும், முழுமையாக அறியப்படாததாயும் உள்ளது கண்கூடு. தங்களால் இதைப் படிப்பவர்கள் அறிந்து தெளிந்தால் மகிழ்ச்சியே.

மறுமொழியிட

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s