தமிழ்-1

இனிய தமிழ் நெஞ்சங்களே,

தமிழ் மொழி பழமைமிக்கது என்று சொல்வதாலோ, வளமை மிக்கது என்று சொல்வதாலோ, தனித்து இயங்க வல்லது என்று சொல்வதாலோ, இனித்து மயங்க வைப்பது என்று சொல்வதாலோ தமிழுக்குச் சிறப்பில்லை. தமிழ் மொழி வாழ்கிறது என்று சொல்வதிலேதான் தமிழின் சிறப்பு தங்கியிருக்கிறது.
இன்று 50 விழுக்காட்டிற்கும் அதிகம் ஆங்கிலம் கலந்த மொழியாய், அழிவின் விளிம்பில் நின்று தமிழின் இன்னுயிர் ஊசலாடக் காண்கிறோம். தமிழ் மொழி வாழ்கிறதா?, எதிர்காலத்தில் தமிழ் வாழுமா? என்று தமிழ் உணர்வாளர்கள் தலையில் அடித்துக் கதறும் அழுகுரல் தமிழர்களைத் தொடுவதாயில்லை. உலகமயமாக்கலின் வாசலால் ஊடகங்களில் ஆங்கிலம் தமிழ் மொழியின் உயிர் பறித்துக் கொண்டிருக்கிறது.
சூடு, சொரணையற்ற தமிழர்களே, வெட்கப்படுங்கள். கேடுகெட்டுப் போனோம். தமிழனைப் பார்த்து, தமிழில் பேசு என்று சொல்லும் தலைகுனிவு ஏற்பட்டிருக்கிறது. ஆட்சியில் இந்தி, கோயிலில் வடமொழி, இசை மேடையில் தெலுங்கு, கல்லூரியில் ஆங்கிலம். வீழ்ச்சியா, இல்லையா இது? சொல்லுங்கள்.
தமிழர்களே, தமிழர்களே முதற்கடமையாய்த் தமிழ் மொழி காப்போம் என்று முரசு கொட்டுங்கள்.
தமிழ் எங்கள் உயிரிலும் மேலாகும்.
தமிழ் எங்கள் உயிரிலும் மேலாகும்.
தமிழ் எங்கள் உயிரிலும் மேலாகும்.
என்றபடி காசி ஆனந்தன் அவர்களின் பேச்சோடு துவங்குகிறது. ’தமிழ் எங்கள் உயிரிலும் மேலாகும்’ என்ற பெயரில் அமைந்த குறுந்தகடு. மொத்தம் எட்டு தனிப் பாடல்களைக் கொண்ட இதை பாடகர் மகராசன் அவர்கள் தாமே பாடி, இசையமைத்துள்ளார். தமிழின் குணம் ததும்பும் இப்பாடல்களை அடுத்தடுத்து உங்கள் பார்வைக்கு வைக்க விருப்பம். உணர்ச்சிக் கவிஞர் பற்றிய அறிமுகம் தேவையில்லை என்றே நினைக்கிறேன். இன்னொரு பதிவில் மீண்டும் இணைவோம்.

Advertisements

2 thoughts on “தமிழ்-1

    1. ஆம். அவரேதான். தமிழ் மொழி பற்றிய மேலும் பல கவிதைகளை அவர் தந்துள்ளார். விரைவில் பகிர்கிறேன். நன்றி

மறுமொழியிட

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s