புது வெள்ள நினைவுகள்-3

நீண்ட நாட்களாகிவிட்டது. இல்லையில்லை, மாதங்களும் கடந்து விட்டது. இப்படியொரு தொடர் எழுதினேனா என நீங்கள் மட்டுமல்ல, நானுமே ஐயமுற நேர்ந்தது. கடந்த மே மாதத்திற்குள் பொன்னியின் செல்வனைப் படித்து முடிப்பதாக ஓஜஸிடம் சொல்லியிருந்தேன். என் தந்தை வேறொரு புத்தகத்தை படிக்கச் சொன்னதால் மனம் மாறி அதைப் படித்தேன். அதுபற்றி பிறகு எழுதுகிறேன்.

போதும். தன்புராணம். நேரடியாக அனுபவங்களுக்குள் மூழ்குகிறேன். முதல் பாகத்தை இரண்டு நாட்களில் படித்து முடித்தேன். ஆனாலும் நிறைய தாக்கம் பெற்றேன். நிறைய விவாதிக்க முடிந்தது. நிறைய கற்கவும் முடிகிறது.

சஸ்பென்ஸ் உடைக்காமல் ‘பொன்னியின் செல்வன்’ குறித்த அனுபவங்களை எழுத நினைப்பதே கடினமாயிருக்கிறது. எனவே தயைகூர்ந்து புத்தகம் படிக்காமல் இப்பதிவைப் படிக்காதீர்கள். ஓஜஸ் என்னிடம் சில ரகசியங்களைக் கூறி சுவாரசியம் கலைத்து விட்டார். படிக்கும் பிறராவது மற்றவர்களின் சுவாரசியத்தைக் கலைக்காதீர்கள்.

நந்தினி என்கிற கதாபாத்திரத்தன்மையின் உருவாக்கம் எப்படி செய்யப்பட்டது? என ரொம்ப குழம்பிவிட்டேன். அடுத்தடுத்த பக்கங்களில் அந்த பாத்திரப்படைப்பின் நோக்கும்-போக்கும் அத்தனை சுவாரசியம். அத்தனை அசுரத்தனம். இன்னும் கொஞ்சம் விளங்கச் சொல்வதென்றால் வில்லத்தனம். ஆழ்வார்க்கடியானும் அப்படித்தான். ஒற்றனுக்கே ஒற்றனாக விளங்குவதிலாகட்டும், சைவ-வைணவ யுத்தம் செய்வதிலாகட்டும். அத்தனை நுணுக்கம். சின்னச்சின்ன /வந்து போகும் பாத்திரங்களையும் மறக்காது படிக்க வேண்டியிருக்கிறது. திடீரெனத் தோன்றி ஆச்சர்யம் செய்கிறார்கள்.

இரண்டாம் பாகத்தை சில நாட்களுக்கு முன் படித்து முடித்தேன். பெண்கள்தான் இவ்வுலகத்தை இயக்குகிறார்கள். இதுவரை இந்த நாவலும் பெண்களாலேயே நகர்கிறது. அதிகமாய் கல்கி வசீகரிக்கிறார். வாசிக்க வைக்கிறார்.

வாசிப்பு என்கிற ஒன்றுமட்டும் இல்லையேல் என்னாகும் என் வாழ்வு? நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இருந்தாலும் சலிப்பு தட்டுகிறது எனக்கு. பலவீனமான உடல்வாகுடைய நான் என்செய்வேன்? குறிப்பாக வருணணைக்காட்சிகளில் படிக்க சிரமப்பட்டேன். ஓஜஸிடம் கூட இதுபற்றிச் சொன்னேன்

பெரிய நாவல் என்கிற அளவிலும் சரி, எடுத்துக்கொண்ட விஷயத்தை முழுமையாகத் தர வேண்டிய அக்கறையிலுமாக கல்கி ஒளிர்கிறார்.மிளிர்கிறார். வரலாற்று ரீதியிலான தகவல்களை ஆங்காங்கே அள்ளித் தெளிக்கிறார். இந்த நாவலில் வெளிப்படும் மனித உணர்வுகள் என்கிற வகையில் எழுத வேண்டும். ஆனால் அது இன்னொரு பதிவில்.

புதுப்புது சொற்களும், உரைநடை அமைப்புகளுமாயிதைப் படிக்கப்படிக்கத்தான், எழுதஎழுதத்தான் தோன்றுகிறது. அன்பில் இனியவர்களுக்கு, இத்தோடுப் புது வெள்ள நினைவுகளை முடித்துக் கொள்ள விருப்பம். கவலை வேண்டாம். அடுத்ததாக அடுத்த கட்டத்திற்கு செல்வோம். இதை முடிவாக எண்ண வேண்டாம். முடிவென்பதே எங்குமில்லை. முடிவு மற்றுமோர் தொடக்கத்திற்கு இட்டுச் செல்லும். என் நினைவுகள் இனி ‘சுழற்காற்றாய்’ மாறும். காத்திருங்கள்.

                                                                                                                                                                                                                    -நினைவுகள் அழியாது.

One comment

மறுமொழியிட

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s