புதுவெள்ள நினைவுகள்-2

கல்கியின் பொன்னியின் செல்வனில் நான் ரசித்த இடம் எனச் சொன்னால் வல்லவரையன் வந்தியத்தேவனை ஒவ்வொரு கதாபாத்திரமும் சேர்ந்து தொண்டை மண்டலத்திலிருந்து, சோழ நாடு வரை கொண்டு செல்லும் காட்சிகள். (அதுதான் முதற்பாகத்தின் அடிநாதம் என்பது வேறு விஷயம்!). உவமைக்கு பொறுத்தருள்க. நீங்கள் தசாவதாரம் படம் பார்த்திருக்கிறீர்களா? அதில் கோவிந்த் கமலை (அதாம்பா சயிண்டிஸ்ட் கமல்!) மற்ற 8 கமல்களும் சேர்ந்து இடம் மாற்றிக்கொண்டே போவர். அதுபோலத்தான் வந்தியத்தேவனையும்…..(நீங்களே நிரப்பிக்கொள்ளுங்கள்!)

பொன்னியின் செல்வன் ஒரு நேர்த்தியாக சமைக்கப்பட்ட சமையல் அல்ல அல்ல விருந்தைப் போன்றது. அங்கே அறுசுவை போல நவரசம் இங்கே. கொஞ்சம் விரிவாக அலசுவோம்.

அடிப்படையில் இது வரலாற்று புனைவு நூல்தான். இதன் காட்சியமைப்புதான் கொஞ்சம் வித்தியாசம். ஒரு வீரன் கொண்டு செல்லும் ஓலை எங்கனம் சென்று சேர்கிறது என்பதே முதல்பாகம். இதைவிட சுருக்கமாக சொல்லமுடியாது.அடுத்தது கதாபாத்திரத்தன்மை.

இந்த பாகத்தின் கதாநாயகன் கண்டிப்பாக வல்லவரையன் வந்தியத்தேவன்தான். அடுத்த இடம் யாருக்கு என்பதில் ஒரு போட்டியே நடக்கும். இருப்பினும் (ஒரு நிமிடம். இக்கட்டுரை பதிவாகும் வரை நான் அடுத்த பாகத்தைப் படிக்கவில்லை என்பதை குறிப்பிடுகிறேன்.) அடுத்த நிலை நந்தினிக்குதான். இரு பழுவேட்டரையர்கள் அடுத்து. குந்தவை, ஆழ்வார்க்கடியான், ….. அய்யோ இது போல நான் பட்டியல் போட்டால் தக்காளி, முட்டை, செருப்பெல்லாம் பறக்கும் என பயமாயிருப்பதால் அடுத்த நிலைக்கு தாவுவது சிறப்பு.

வெகு சில சொற்பமான இடங்களில் மட்டுமே அடுத்து என்ன நடக்கும் என என்னால் கணிக்க முடிந்தது. பெரும்பாலும் ஆச்சர்யம்தான் கிடைத்தது.குறிப்பாக சொல்லவேண்டுமானால் தஞ்சைக் கோட்டைக்குள் வல்லவரையன் நுழைந்ததுமே, அடுத்தடுத்து நிகழும் நிகழ்ச்சிகள் அடடா! அபாரம்!! வேளப்படை அறிமுகமாகட்டும், சேந்தன் அமுதன் அறிமுகமாகட்டும் நாம் பக்கத்தில் நின்று கேட்பதாயும், பார்ப்பதாயும் ஓர் உணர்வு.

அதாவது, பல்வேறு சூழ்நிலைகளில் பழுவேட்டரையர்களைப் பற்றிக் கூறும் ஆசிரியர் நமக்கு அவர்களின் வன்மையை, வலிமையை நன்கு எடுத்துக்காட்டுகிறார். இப்படிப் பட்ட கோட்டைக்குள் எப்படி வல்லவரையன் நுழையப் போகிறானோ என்கிற ஒரு அனுதாபத்தை, அச்சத்தை நம்மிடையே ஏற்படுத்துவதையும் என்னால் உணர முடிகிறது.

நந்தினியுடனான வல்லவரையனின் அறிமுகமே அட! போட வைப்பதாக உள்ளது. திடுமென ஒரு பொய்யைச் சொல்லி நந்தினியின் மோதிரத்தை வாங்குவதிலாகட்டும், சுந்தரச் சோழரிடம் ஓலையை தந்திரமாய் கொடுப்பதிலாகட்டும் வல்லவரையன் வந்தியத்தேவன். ஆகா!
எழுத எழுத இன்னும் சொல்ல ஆசை யாய் இருக்கிறது.முடிந்தமட்டும் சஸ்பென்ஸ் உடைக்க மாட்டேன் என்ற உறுதியுடன் உள்ளேன். பார்க்கலாம் என்ன நடக்கிறதென.
இன்னும் சொல்ல நிறைய இருக்கிறது. இப்போதைக்கு இது மட்டும்.
-நினைவுகள் அழியாது.

Advertisements

One thought on “புதுவெள்ள நினைவுகள்-2

மறுமொழியிட

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s