தந்தையோடு…-02

**   பெரியார் குறித்து பல்வேறு தகவல்கள் காணக்கிடைக்கின்றன. முடிந்தமட்டும் அவற்றை தொகுத்து அளிப்பதே இப்பதிவின் நோக்கம். சீரான இடைவெளியில் தொடர்ச்சியாக வெளிவரும்.இக்கட்டுரை தினமணி கதிர்- லிருந்து எடுக்கப்பட்டுள்ளது.  **
***
இதையும் படிக்கலாமே!
***
குடும்பச் செல்வாக்கு

பெரியார் இன்றைக்குச் சரியாக ஒரு நூற்றாண்டுக்கு முன்பே பொது வாழ்க்கைக்கு வந்துவிட்டார். 1907-ம் ஆண்டிலேயே அவர் ஈரோட்டில் கெüரவ நீதிபதியாக, ஈரோடு வட்ட தேவஸ்தானக் குழுவின் தலைவராக, ஈரோடு தாலுக்கா போர்டு துணைத் தலைவராக,ஜில்லா போர்டு உறுப்பினராக படிப்படியாக உயர்ந்து ஈரோடு நகரமன்றத் தலைவராகவும் இருந்து அரும் சாதனை புரிந்தார்.

அக்காலத்திலேயே திரளான செல்வமும், தெருவிற்கு ஒரு மாளிகையும், வளம் குவித்திடும் வணிக நிறுவனங்களும், தோட்டம், நன்செய், புன்செய், வேளாண் பண்ணைகளும், இட்ட பணி செய்திட ஏவலர்,நண்பர் குழாமும் இருந்தன. இப்படி எந்தப் பக்கம் திரும்பினாலும் குடும்பச் செல்வாக்கு, எட்டுத் திசையிலிருந்து வாணிபத்தில் ஆதாயம் என இத்தனையும் இருந்தும், இவையெல்லாம் எனக்குத் தேவையில்லை. அறியாமையில் மூழ்கிக் கிடக்கும் நாட்டு மக்களை விழிப்படையச் செய்யத் தொண்டாற்றவே விருப்பம் என்று பெரியார் சுகபோகங்களைத் துறந்து, காடு மேடு சுற்றிக் கடும் பயணம் மேற்கொண்டார்.

அப்போது குடும்பத்தில் முன்னிலும் அதிக செல்வாக்கும் செல்வச் செழிப்பும் சமூக அரசியல் ஈடுபாடும் மிகுந்திருந்த நேரம். காந்தியடிகளே ஈரோடு மாளிகைக்கு வந்து பெரியாரிடம் விவாதித்துச் செல்கிற தகுதியோடு இரண்டாண்டுக் காலம் தமிழ்நாடு காங்கிரசின் தலைவராக பெரியார் இருந்தார். அக்காலத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஈரோட்டில் பெரியார் வீட்டுத் தாழ்வாரத்தில் நடைபயின்று கொண்டிருந்தது.

தேசிய இயக்கத்தில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்த பெரியாருக்கு வ.உ. சிதம்பரம் பிள்ளை, தமிழ்த்தென்றல் திரு.வி.க., ராஜ கோபாலாச்சாரியார் (ராஜாஜி) டாக்டர் வரதராஜூலு நாயுடு போன்றவர்கள் அணுக்கத் தோழர்களாக விளங்கினர்.

காந்தியடிகள் தலைமையில் வீறுநடை போட்ட காங்கிரஸ் மகாசபையின் ஒத்துழையாமை இயக்கத்தில் பெரியார் மிகுந்த ஆர்வம் காட்டிய நேரம். அவருக்கு மிகப்பிடித்தமான கொள்கைகளாகிய தீண்டாமை ஒழிப்பு, மதுவிலக்கு, சாதி ஒழிப்பு போன்ற தீவிரத் திட்டங்களில் தம்மை முழுக்க ஈடுபடுத்திக் கொண்டார். 1920ஆம் ஆண்டிலேயே தமிழ்நாட்டில் காங்கிரஸ் இயக்கத்தின் வளர்ச்சி என்பது பெரியாரின் இணையற்ற பணிகளிலேதான் மிளிர்ந்தது.

முரட்டுக் கதராடை அணிந்து கொண்டு பெரியார் கதர் மூட்டை சுமந்து வீதி வீதியாகக் கதர் பிரசாரம் செய்து விற்பனை இயக்கம் நடத்தினார். தம்முடைய தாயாரும் தங்கையரும் சுற்றத்தாரும் கட்டாயமாகக் கதர் அணிய வேண்டுமென்பதை நடைமுறைப்படுத்தினார். வேங்கடப்ப நாயக்கரின் இணையர் சின்னத்தாய் அம்மையாரும் முரட்டுக் கதராடைகளையே உடுத்தத் தொடங்கினார்.

எந்நேரமும் பஜனைப் பாடல்களும் பக்தி உபன்யாசங்களுமாக இருந்த அந்த இல்லத்தில் இப்போது கதர்ப் பிரசாரமும் தக்களி ராட்டை சத்தமும் ஓங்கலாயின. கதர் அணிவதையே காங்கிரஸ் கட்சியின் திட்டமாய் கொள்கையாய் மாற்றியவர் பெரியார். பிற்காலத்தில் புகழ்பெற்ற கல்கி ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, ஈ.வே.ரா. விடம் அவரது திருச்செங்கோடு கதர் அங்காடியில் பணியாற்றியவர் என்பது தகவல்.

மதுவிலக்குக் கொள்கையையும் பெரியார் தீவிரமாகப் பிரசாரம் செய்தார். பிரசாரத்தோடு மட்டும் நிற்கவில்லை எதிலும் தீரமும் வீரமும் காட்டியவர். சேலம் மாவட்டம் தாதம்பட்டியில் தமது தோட்டங்களிலிருந்த சுமார் 500க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை அடியோடு வெட்டி வீழ்த்தினார் என்பது வரலாறு.

One comment

மறுமொழியிட

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s