புதுவெள்ள நினைவுகள்


இக்கட்டுரையை இப்படித்தான் ஆரம்பிக்க வேண்டுமா? என்று தெரியவில்லை. ஆனாலும் பரவாயில்லை.
ஓஜஸ் எனக்கு அறிமுகமான சில மாதங்களில் அவருக்கு கல்கி அறிமுகமாகினார். பொன்னியின் செல்வன் மூலமாய். இங்கே குறிப்பிடவேண்டிய மற்றோர் விஷயம், அச்சமயம் இருவருமே பதின்வயதின் இறுதிக்கட்டத்தில் இருந்த தமிழ் இளைஞர்கள் என்பது.
ப்ராஜெக்ட் மதுரை தளத்தின் உதவியால் பொன்னியின் செல்வனை சந்தித்து வந்தார் ஓஜஸ். அவ்வப்போது/அடிக்கடி ஆர்வமாய் என்னிடம் அதைப் பற்றியெல்லாம் விவரிப்பார். இது வளர்ந்து, வளர்ந்து சிவகாமியின் சபதம், அலை ஓசை, பார்த்திபன் கனவு, ….. என்றெல்லாம் பல்கிப் பெருகியது. நாளாக நாளாக அவரின் ஆர்வம் சிறிதும் குறைவின்றிக் கூடியது. திரும்பத் திரும்ப படித்தார். காலங்களை மறந்து படித்தார். கல்கியின் மற்ற நூல்களை முடிந்த மட்டும் வாங்கிக் குவித்தார். போதாக்குறைக்கு நூலகங்களை நாடினார். தற்போதும் கூட ‘கல்கி’ வார இதழை முடிந்தமட்டும் வாரந்தவறாமல் படிக்கிறார். எல்லாமே கல்கியின் பொருட்டு.

தன்னை முழுமையான கல்கி வாசகனாக-நேசனாக-தாசனாக ஆக்கிக்கொள்ள முழுமூச்சாய் பாடுபடுகிறார். போதும்  ஓஜஸ் புராணம். இப்படிப்பட்டவர் கேட்ட ஒரு கேள்வியாலும், இரு வேண்டுகோள்களினாலுமே இக்கட்டுரை உருவானது.
நான் விபரம் தெரிவதற்கு முன்பிருந்தே தமிழ்வழியில் கல்வி கற்றவன். சிறுவயதிலேயே செய்திதாள்களும், பற்பல சிறுவர் சிறுகதைகளை[மட்டுமே]யுமே படித்து காலம் போக்கியவன் நான். என்னைப் பார்த்து கேட்டார் ஓஜஸ் இப்படி.
“நீ எப்போ ஆரம்பிக்கப் போகிறாய்?”
எனது மடிகணினியில் படிக்கும் முதல் மின் -புத்தகம் பொன்னியின் செல்வன் என்றபடி வாக்குறுதி சொல்லி ஒத்திவைத்தேன். சில மாதங்களுக்குப் பின் நான் மடிகணினி வாங்கியபின் கல்கியின் பல்வேறு மின் -புத்தகங்களை எனக்காக தந்தார். நான் பொன்னியின் செல்வனை படிக்கத் தொடங்கினேன்.முதல் அத்தியாயத்தில் வரும் வீராண ஏரியின் வருணனை அப்போதைக்கு சலிப்பூட்ட பின்னர் தொடரவில்லை.
திடீரென ஒருநாள் அந்த அதிசயம் நிகழ்ந்தது.ஆம் சலிப்பூட்டிய செல்வன் வசீகரித்த நாளும் வந்தது.
முதலில் இது போன்ற பெருநாவல்களை படிப்பதற்கு அசாத்திய துணிச்சல் தேவையென நினைக்கிறேன். அதுவும் பொன்னியின் செல்வன் போன்ற புகழ்பெற்ற நாவல்களை படிக்க நாம் எத்தனிக்கையில் பக்கங்களைக் கண்டு எந்த நேரத்திலும் மிரளக் கூடாது. இதை நான் எப்போதும் கடைபிடிப்பேன்.
மின்புத்தகமாய் பார்ப்பதைவிட ஒரு உயிரோட்டமான புத்தகமாய் படிப்பது இன்னும் சுவைதரும் என நம்புகிறேன்.

ஆடித்திருநாளாகட்டும், ஆழ்வார்க்கடியானாகட்டும் சொல்லின் ஓட்டம்தான் பொன்னியின் செல்வனின் பலம். ஆண்டுகளைக் கடந்தும் கல்கி உயிர்பெற காரணம் இதுவாகவும் இருக்கலாம்.

துவக்கத்தில் வந்தியத்தேவன் அறிமுகமாகட்டும், அதன்பின் தொடரும் சில அத்தியாயங்களாகட்டும் கொஞ்சம் மெதுவாக நகர்வதுபோல் தோன்றுகிறது.அது என் தவறாகவும் இருக்கலாம்.குந்தவை வருகையும், குடந்தை சோதிடர் வருகையும் விரைவாக, கதையை நகர்த்தியுள்ளன.

கடம்பூர் மாளிகைக் கூட்டமும், பழுவேட்டரையர் அறிமுகமும் சற்றே திகிலாகவே இருந்தது. அருள்மொழிவர்மர் அறிமுகம் ….. அடடா! ஆவலோடு உள்ளேன் மேலும் படிக்க. வல்லவரையன் வந்தியத்தேவன் எனும் ஒற்றைத் தூரிகையில் கல்கி வரைந்த இந்த முதற்பாகம் பற்றி நானெழுத இந்த ஒரு பதிவு போதாது!

 

Advertisements

4 thoughts on “புதுவெள்ள நினைவுகள்

 1. நல்ல நடை. அருமையான தலைப்பு. இது தொடரட்டும். நீ சொன்னதெல்லம் நேற்று நடந்தது போல உள்ளது. எனக்கு எதற்கு இத்தனை கதை. ‘கல்கி’ அவர்களின் எழுத்தோவியங்களின் மாயம் அது. கண்டிப்பாக மேலும் இது போல எழுதுக…. வாழ்த்துகள்!!!!

  நாற்சந்தியிலிருந்து,
  ஓஜஸ் 😉

 2. தமிழ்,
  ரஞ்சனி அவர்களின் பதிவின் மூலமாக உங்கள் வலைத்தளத்திற்கு வந்துள்ளேன்..
  பொன்னியின் செல்வன் சுருக்கமாக நீங்கள் சொல்வது கதையைப் படிக்கத் தூண்டுகிறது.ஏற்கனவே ஒருமுறை படித்து முடித்து விட்டேன்.ஆனால் திரும்பவும் மெதுவாக கதையின் நடைக்காக ,வர்ணனைகளுக்காக, படிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.உங்கள் தளத்திற்கு வந்த பிறகு அந்த ஆசை அதிகமாகியுள்ளது.
  அருமையாக பதிவிட்டுள்ளீர்கள்

  ராஜி

 3. பதினோராம் வகுப்பு விடுமுறையில் கல்கியின் பார்த்திபன் கனவு படித்தேன். அதில் ஏற்பட்ட ஆர்வம் அப்படியே பொன்னியின் செல்வனில் போய் முடிந்தது. தினம் ஒரு பாகமாக ஆறுநாட்களில் முடித்தேன். கடைசிப்பாகம் நான் படித்த புத்தகத்தில் இரண்டு பாகமாகயிருந்தது. பத்மவாசன் ஓவியத்தில் பொன்னியின் செல்வன் வந்தபோது எங்கப்பா கல்கி வாங்கி சேகரித்தார். அந்த ஓவியங்களின் வழியாக எனக்கு அக்கதாபாத்திரங்கள் மிகவும் நெருக்கமாயின. இனி மீண்டும் ஒருமுறை பொன்னியின் செல்வன் வாசிக்க வேண்டும். தங்கள் பதிவு பழைய நினைவுகளை கொண்டு வந்தது. நன்றி.

மறுமொழியிட

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s