தமிழே உயர்வு

தமிழின் முதல் இலக்கண நூல் தொல்காப்பியம்-3 அதிகாரம், 27 இயல்கள், 1610 நூற்பாக்கள். தமிழரின் வாழ்வியலக்கணமான திருக்குறள் 3 பால்கள், 133 அதிகாரங்கள்,1330 குறள்கள். சிலப்பதிகாரம் 3 காண்டம், 30 காதைகள் 5001 வரிகள். மணிமேகலை 30 காதைகள், 4755 வரிகள். சீவகசிந்தாமணி 13 இலம்பகங்கள், 3145 பாடல்கள். பெரிய புராணம் 2 காண்டங்கள்,           13 சருக்கங்கள், 4286 பாடல்கள். கம்பராமாயணம் 6 காண்டங்கள்,           118 படலங்கள்,10589 பாடல்கள்.நல்லாப்பிள்ளை பாரதம் 18 பருவங்கள், 11000 பாடல்கள். கந்தபுராணம் 6 காண்டம், 135 படலங்கள்,1ஒ0345 பாடல்கள். திருவிளையாடற்புராணம் 3 காண்டங்கள், 36 படலங்கள், 3615 பாடல்கள். சீறாப்புராணம் 3 காண்டங்கள்,92 படலங்கள், 5027 பாடல்கள். இரட்சணிய யாத்திரிகம் 5 பருவங்கள், 47 படலங்கள் ,3776 பாடல்கள். இராவண காவியம் 5 காண்டம், 57 படலங்கள், 3106 விருத்தங்கள். ஏசு காவியம் 5 பாகம், 149 அதிகாரம், 810 விருத்தங்கள், 2346 அகவலடிகள்.

தமிழில் உள்ளவைகள் எல்லாம் அளவில் பெரியவை மட்டுமல்ல தன்மையிலும் பெருமைக்குரியனவாக உள்ளதையே தமிழின் தனிச்சிறப்பு என கொண்டாடுகிறோம்.

தமிழ் மொழி பக்தி மொழி, மனித இரக்க உணர்வைப் பெருமிதமாகப் போற்றும் அன்புமொழி. உலகில் வேறு  எந்த மொழியிலும் காணக்கிடைக்காத அளவு பக்திப்பாசுரங்கள் நிரம்பிய மொழி தமிழ் ஒன்றே. சைவம் பன்னிருதிருமுறையையும், வைணவம் நாலாயிரதிவ்வியப் பிரபந்தத்தையும் வழிபடும் மந்திரமாகப் போற்றி வணங்கிவருகின்றன. இது நெடுங்காலமாகப் பழக்கத்திலிருந்து வரும் தமிழர் வழிபாடு. தேவாரம்,திருவாசகம்,திருப்பாவை,திருவெம்பாவை, திருமொழி, திருவாய்மொழி, திருமந்திரம், திருவருட்பா, திருப்புகழ், தேசோமயானந்தம், சருவசமயக்கீர்த்தனைகள், இசுலாமியத் தாயுமானவரான குணங்குடி மஸ்தானின் பராபரக் கண்ணிகள், இத்தகைய தெய்வப்புகழ்மொழிகள் உலகில் வேறு எந்தமொழியிலும் இல்லை. தமிழ்மொழியிலே நிறைவாக உள்ளன என்பதையே தமிழின் தனிச்சிறப்பு எனக் குறிப்பிடுவதில் பெருமை கொள்கின்றோம்.”

-”தமிழே உயர்வு” நூலிலிருந்து

 

3 comments

 1. தமிழ் பக்தியின் மொழி என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்த பதிவு போல பல சான்றுகள் உள்ளன. ஆனால், பெரியார் பக்தனான நீ, இதனை முன்வந்து எழுதியது தான் சிறப்பு.

  { ஆனால் சாமி இல்லை, கடவுள் இல்லை என்று சொல்லி, நான் முத்தமிழ் அறிஞர் என்று சொல்லும் பலர் இருப்பது, அது போல கட்சிகள் இருப்பது …………. ஸப்பா…. இங்கு அரசியல் வேண்டாம் }

  மேலும் இது போல பதிவுகளை இடு!!!

  நல்வாழ்த்துகள்,

  ஒஜஸ்

  (www.naarchanthi.wordpress.com)

மறுமொழியிட

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s